மதுரை: மதுரை மாநகர் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. அனுஷா மனோகரி மற்றும் உதவி ஆய்வாளர் திருமதி. சாந்தி ஆகிய இருவரும் ஜெய்ஹிந்துபுரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலுக்கு வந்த பெண்களுக்கு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தினார்கள்.
மேலும் தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட காவலன் SOS செயலியின் பயன்கள் பற்றி விளக்கம் அளித்தார். 300- க்கும் மேற்பட்ட பெண்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள்
மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் DE NOBILI Matriculation school பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு
மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி இன்று (13.12.19) B1 சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திருமதி. லோகேஸ்வரி அவர்கள் மதுரை MAVM மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS செயலி அதன் பயன்பாடுகள் மற்றும் அதனை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது குறித்தும் விளக்கமளித்தார். இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
மதுரை மாநகர் மதிச்சியம்மற்றும் தல்லாகுளம் காவல் நிலையம்
மதுரை மாநகர் மதிச்சியம் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள பொதுமக்களுக்கு தற்காப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் அண்ணாநகர் சட்டம் மற்றும் ஒழுங்கு சரக காவல் உதவி ஆணையர் திருமதி. லில்லி கிரேஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. புவனேஸ்வரி மற்றும் மதிச்சியம் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திருமதி.அணுராதா ஆகியோர் POCSO ACT CHILD MARRIAGE,CHILD ABUSE, CHILD LABOUR பற்றி விரிவாக விளக்கம் அளித்தனர். மேலும் தமிழ்நாடு காவல்துறையால் அறிமுகம் செய்துள்ள காவலன் SOS செயலியின் பயன்பாடுகள் பற்றியும் விரிவாக விளக்கம் அளித்தார்.
கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு
மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி இன்று (12.12.19) திலகர் திடல் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் உதவி ஆணையர் திரு.வேணுகோபால் அவர்கள் மற்றும் C2 சுப்ரமணியபுரம் ச&ஒ காவல் ஆய்வாளர் திரு.சக்கரவர்த்தி அவர்களும் மதுரை சௌராஷ்டிரா பெண்கள் கல்லூரியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான தற்காப்பு கலைகள் பற்றியும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் அவர்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்துதல்களிலிருந்து எவ்வாறு அவர்களை தற்காத்துக்கொள்வது என்பது பற்றியும் மற்றும் தமிழ்நாடு காவல்துறையால் அறிமுகம் செய்துள்ள காவலன் SOS செயலி அதன் பயன்பாடுகள் மற்றும் அதனை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது குறித்தும் விரிவாக விளக்கமளித்தார்.
பள்ளி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு வகுப்பு
மதுரை மாநகர் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. புவனேஸ்வரி அவர்கள் De Nobili Matriculation Higher Secondary School ஆசிரியர்களுக்கு POCSO ACT CHILD MARRIAGE CHILD ABUSE மற்றும் தமிழ்நாடு காவல்துறையால் அறிமுகம் செய்துள்ள காவலன் SOS செயலியின் பயன்பாடுகள் பற்றியும் விரிவாக விளக்கம் அளித்தார்.
பள்ளி மாணவ மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு வகுப்பு
மதுரை மாநகரில் அமைந்துள்ள அதியப்பனா (CBSE) பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு கார்த்திக் (அயல் பணி சைபர் கிரைம்) மற்றும் சமூக ஊடக பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திருமதி. ஷர்மிளா ஆகிய இருவரும் சமூக ஊடகங்களின் வழியாக ஏற்படும் குற்றங்கள் பற்றியும் WHATSAPP FACEBOOK TWITTER INSTAGRAM போன்றவற்றினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்தும் மற்றும் தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட காவலன் SOS (SAVE OUR SOUL) செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றியும் விரிவாக விளக்கம் அளித்தனர்.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை
Related