மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு காவல் சார்பு ஆய்வாளர் திரு.ராஜா மற்றும் போலீசார் இணைந்து பாலமேடு பகுதிகளில் ஆட்டோ ஓட்டுனர்களிடம், ஆட்டோவில் அதிக ஆட்களை ஏற்றுவது, பேருந்து மற்றும் இலகுரக வாகனங்களுக்கு இடையூறு செய்யும் வகையில் , ஆட்டோ ஓட்டுவது , கண்ட இடங்களில் ஆட்டோவை நிறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.
மேலும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். தலைக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுரை கூறினர். இதைக் கவனித்த மக்கள் போலீசாரை வெகுவாக பாராட்டினர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை