மதுரை : மதுரை தெப்பகுளம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். மதுரை தெப்பக்குளம் இன்ஸ்பெக்டர் திரு.கணேசன் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, புது ராமநாடு ரோடு பள்ளிக்கூடம் அருகே பதுங்கியிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அவர் மருதுபாண்டியர் நகர் பழனி மகன் சிவகுமார் 27 என்று தெரியவந்தது.
மேலும் , அவரிடமிருந்த பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்தபோது அவர் கொள்ளைஅடிக்கும் நோக்கத்துடன் அங்கு பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே, போலீசார் உடனடியாக சிவக்குமாரை கைதுசெய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி















