தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் பாதுகாப்பு.
மதுரை தென் மண்டல காவல்துறை தலைவர் திரு. டி.எஸ். அன்பு இ.கா.ப அவர்கள் நேரில் சென்று ஆய்வு.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்று வருகின்றது.
வருகின்ற 09.11.2021 அன்று சூரசம்ஹாரம், 10.11.2021 அன்று திருக்கல்யாணம் ஆகிய இரண்டு நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதையடுத்து, மேற்படி 2 நாட்களுக்கு பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வருவதற்கு அனுமதி கிடையாது. அதன் பிறகு வரும் 11.11.2021 முதல் பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுவார்கள்.
கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை தென்மண்டல் காவல்துறை தலைவர் திரு. டி.எஸ். அன்பு இ.கா.ப அவர்கள் இன்று (07.11.2021) நேரில் சென்று ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்.
தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் ஆய்வின்போது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.ஜெயக்குமார், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. இளங்கோவன்,
திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. சுமதி, திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. முரளீதரன்,
குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.கனகாபாய், போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. வேல்முருகன் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.