மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டில் வேன் மோதி பைக்கில் சென்றவர் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் 21 மெயின் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் அப்போது அதே பாதையில் வந்த வேன் ஒன்று மோதி சம்பவ இடத்திலேயே பலியானார் ஆனையூர் முதல் தெருவை சேர்ந்த விஜய பாண்டியன் 39 என்பவர் ஓட்டி வந்தார் இந்த விபத்து தொடர்பாக விஜய பாண்டியன் மீது போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி