மதுரை : மதுரை ஜெய்ஹிந்த்புரம் எம்கே புரத்தை சேர்ந்தவர் ரவி மகன் கார்த்திகேயன் 25 .இவர்அதே பகுதியில் சென்றபோது ஜீவாநகர் 2-வது தெருவை சேர்ந்த ரவுடிகள் மணிகண்டன் (30) ஜீவா நகர் சோனியா கோவில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மொட்டைமணி ( 26) இவர்கள் இருவரும் கார்த்திகேயனை வழிமறித்து வாள் முனையில் மிரட்டி ரூபாய் 1,350ஐபறித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திகேயன் ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன் (30), மணி கண்டன் என்ற மொட்டைமணி (26 )இருவரையும் கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.A.வேல்முருகன்