மதுரை : வண்டியூரில் டாஸ்மார்க் முன்பாக நிறுத்தியிருந்த பைக் திருட்டு
போதை ஆசாமி கைவரிசை. மதுரை மார்ச் 28 அண்ணாநகர் அன்பு நகரைச் சேர்ந்தவர் அல்போன்ஸ் 39. இவர் தனக்கு சொந்தமான பைக்கை வண்டியூர் மெயின்ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை முன்பாக நிறுத்தி இருந்தார். அந்த பைக்கை போதை ஆசாமி திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அல்போன்ஸ் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு போதை ஆசாமியை தேடி வருகின்றனர்.
ரிங் ரோடு அம்மா திடலில் அரிவாளுடன் பதுங்கி இருந்த வாலிபர் கைது .
மதுரை மார்ச் 28 அண்ணா நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ். இவர் பாண்டி கோயில் ரிங் ரோடு அம்மாதிடல் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார் .அப்போது போலீசாரை கண்டதும் வாலிபர் ஒருவர் பதுங்கினார். அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அண்ணா குடியிருப்பைச் சேர்ந்த பாக்கியராஜ் 37 என்று தெரியவந்தது. அவரிடம் சோதனை செய்தார். சோதனையில் அவர் அரிவாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அரிவாளை பறிமுதல் செய்து பாக்யராஜை கைது செய்தார்.
ஆன்லைன் காதலியிடம் நகை செல்போன் பறிப்பு மாட்டுத்தாவணி அருகே சம்பவம் மதுரை மார்ச் 28 ஆன்லைன் காதலியிடம் தங்க நகை செல்போன் பறித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் வத்திராயிருப்பு அல்லா கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம் மகள் விஜயலட்சுமி32. இவரிடம் ஆன்லைனில் நண்பராக வாலிபர் பழகினார். பின்னர் இருவரும் காதலர்களாக மாறினர். அவர் விஜயலட்சுமியை மாட்டுத்தாவணி எதிரில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு வரும்படி அழைத்தார் . அங்கு அவருக்கு ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்வதாக கூறி நம்ப வைத்தார். பின்னர் அந்த பெண்ணிடம் நைசாக பேசி அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியையும் செல்போன் ஒன்றையும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். இந்த சம்பவம் குறித்து விஜயலட்சுமி கே.புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.
ஆனையூரில் திருமண ஆசை காட்டி சிறுமி கற்பழித்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது.
மதுரை மார்ச் 28 ஆனையூரில் திருமண ஆசைகாட்டி சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கி வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆணையூர் சஞ்சீவி நகரை சேர்ந்தவர் புதியன் மகன் சிவசங்கர் 19. இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். அவருக்கு திருமண ஆசை காட்டி அவரை கற்பழித்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் ஆனார் .இது பெற்றோருக்கு தெரிய வந்ததும் அவர்கள் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர் . போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கிய வாலிபர் சிவசங்கரை கைது செய்தனர்.
ஜெய்ஹிந்த்புரத்தில் கத்தி முனையில் வழிப்பறி இரண்டு வாலிபர்கள் கைது. மதுரை மார்ச் 28. ஜெய்ஹிந்த்புரம் முதல் தெருவை சேர்ந்தவர் நல்லுசாமி மகன் ராமு38. இவர் ஜெய்ஹிந்த் புரம்மெயின் ஹஜ் ரோட்டில் உள்ள ஒரு பள்ளிஅருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை வழிமறித்த 2 வாலிபர்கள் அவரை கத்திமுனையில் மிரட்டி அவர் வைத்திருந்த ரூபாய் 2 ஆயிரத்தை பறித்துச்சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து ராமு கொடுத்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து எம் கே புரத்தைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் என்ற பச்சைகாரிசவுந்தர் 39, சோலைஅழகுபுரம் ஜானகி நகரைச் சேர்ந்த முத்து இருளாண்டி மகன் சத்தியமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி