அலங்காநல்லூர் அருகே பெண்னின், செயின் பறிப்பு:
மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கடையில் நின்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 5 சவரன் செயினை மர்ம ஆசாமி பறித்துக் கொண்டு இரு சக்கரவாகனத்தில் தப்பியுள்ளார்.
கோவில்பாபாகுடி, தினமணி நகரைச் சேர்ந்தவர் மேரி வயது 40. இவர், வல்லப கணபதி தெருவில் உள்ள கடையில் மாவு வாங்குவதற்காக நின்று கொண்டிருந்தராம்.
அப்போது, கடையில் பொருட்கள் வாங்க வந்தவர், மேரி கழுத்தில் கிடந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு, மோட்டார் சைக்கிளில் தப்பியோடி விட்டாராம்.
இது குறித்து அலங்காநல்லூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்:
மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே ஆட்டோ நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்ததில், ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அலங்காநல்லூர் வாவிடமருதூரைச் சேர்ந்தவர் ஹரிஹரன் மகன் தென்னவன் என்ற திணேஷ் வயது. 19. இவரும் அவரது நண்பர்களும், ஆட்டோவில், கல்லணை
யிலிருந்து- வாவிடமருதூருக்கு ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வளைவில் ஆட்டோ திரும்பும்போது, நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்ததில், ஆட்டோவில் பயணம் செய்த திணேஷ், பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும், விக்னேஷ் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து, அலங்காநல்லூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இலங்கைத் தமிழர்களிடம் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த குற்றவாளி காசிவிசுவநாதன் வீட்டில் திடீர் சோதனை:
மதுரை: மதுரை திருமங்கலம் கப்பலூர் பகுதி காந்திநகரில், மத்திய தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இலங்கை தமிழர் மற்றும் சிங்களர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்து, காவல் துறையால் கைது செய்யப்பட்ட காசி விஸ்வநாதன் 30., என்பவர் மதுரை கப்பலூர் பகுதியில் காந்தி நகரில், வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட 22 இலங்கைத் தமிழர்கள் மற்றும் இரண்டு சிங்களர்கள் அழைத்து வரப்பட்டு மதுரை கப்பலூர் கூத்தியார்குண்டு பகுதியில் தனியாக தங்க வைத்திருந்தார்கள்.
இதனை பார்த்த, பொதுமக்கள் சந்தேகத்தின் அடிப்படையில், காவல் துறைக்கு தகவல் தெரிவித்து அதன் அடிப்படையில், மத்திய புலனாய்வுத்துறை விசாரணை செய்து கியூ பிராஞ்ச் போலீசார் காசிவிசுவநாதன் என்பவரை கைது செய்து ,மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதே சம்பவம், தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மங்களுரில் நடைபெற்றது .
இதில், 30 பேர் பாதிப்பு அடைந்தனர் எனவே, இரண்டு சம்பவத்தில் தொடர்புடைய காசி விஸ்வநாதன் இடை தரகராக செயல் பட்டார்.
அதன் அடிப்படையில் ,அவர் வீட்டை சோதனை செய்த மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் அவரது வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட இலங்கை பணம் மற்றும் லேப்டாப் ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறபடுகிறது. இதனைத் தொடர்ந்து, மத்திய புலனாய்வுத் துறை காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரு சக்கர வாகனத்தில் செல்லும் பெண்களை குறிவைத்து, வழிப்பறி செய்த வாலிபர் கைது:
மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா, மற்றும் அதனை சுற்றியுள்ள வாகைகுளம், மேல உரப்பனூர், சோழவந்தான் ரோடு, விக்கிரமங்கலம், செக்கானுரணி, பெருமாள்கோவில்பட்டி, பெரிய கட்டளை, நத்தப்பட்டி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஆகிய
பகுதிகளில் தனியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்களிடம் அவர்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளை வழிப்பறி மற்றும் வழி பறிமுயற்சி போன்ற குற்றச் செயல்பட்டதாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக புகார் தொடர்ந்து வந்த நிலையில்,
இது சம்பந்தமாக, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் உத்தரவின் பேரில், திருமங்கலம் திருமங்கலம் துணை கண்காணிப்பாளர் திரு.முத்துக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து சார்பு ஆய்வாளர் திரு.ராமகிருஷ்ணன் தலைமை காவலர் திரு. சரவணகுமார், திரு,அருள்ராஜ், திரு.சரவணன் , திரு.வயக்காட்டு சாமி, திரு.முத்துக்குமார் ஆகிய போலீசார் முயற்சியில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இந்நிலையில், குற்றச் சம்பவங்கள் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா உதவியால், உசிலம்பட்டி தாலுகா வாலாந்தூர் நாட்டாபட்டியை சேர்ந்த நாககுமார் மகன் ராஜ்குமார் வயது 27 என்பவர் என்று தெரிய வந்தது, அவரை கைது செய்து அவரிடம் இருந்த இருசக்கர வாகனம் மற்றும் 13. 1/2 சவரன் நகை பறிமுதல் செய்தனர்.
மேலும், விசாரனையில் கஞ்சா போதைக்கு அடிமையானதால் இது போன்ற குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதை குற்றவாளி ஒப்பு கொண்டதன் அடிப்படையில், வழிப்பறி நடைபெற்ற தை அறிந்த தனிப்படை போலீசார் குற்றவாளி மீது வழக்கு பதியபட்டு சிறையில் அடைத்தனர்.
மேலும், தொடர் கொள்ளைகளை தடுக்கும் வகையில் போலிசார் தீவிர ரோந்து பணி ஈடுபடுத்தபட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் விதத்தில் உடனடியாக போலீஸ் அவசர உதவி எண் 100 ஐ தொடர்புகொள்ள வழியுறுத்தியும் பாதுகாப்பாக வெளி பயணம் செய்யவும் திருமங்கலம் தாலுகா மற்றும் டவுன் போலீசாரும் வழியுறுத்தி
யுள்ளனர்.
பெண்கள் கிராம பகுதிகளில் விசேஸம் மற்றும் பணிக்கு செல்ல கூடிய பெண்கள் உடன் பாதுகாப்பாக துனையுடன் செல்வது அல்லது நல்ல எச்சரிக்கயுடன் செல்ல பொதுமக்களுக்கு நமது செய்திகள் மூலம் அறிவிப்பை தெறிவித்துள்ளனர்.
வீட்டில் தங்கி இருந்த சிறுமி கற்பழிப்பு அத்தையின் கணவர் கைது
மதுரைவீட்டில் தங்கியிருந்த சிறுமியை கற்பழித்த அத்தையின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
உசிலம்பட்டி தாலுகா மூனான்டிபட்டியை சேர்ந்தவர் ஜெகதீசன் 32.இவர் அண்ணாநகர் யாகப்பாநகரில் வசித்து வருகிறார்.
இவருடன் பதினேழுவயது உறவுக்கார பெண்ணும் தங்கி இருக்கிறார்.அந்த சிறுமிக்கு ஜெகதீசன் அத்தை கணவர் ஆவார்.அவர் தனியாக இருக்கும்போது சிறுமியை மிரட்டி பலமுறை கற்பழித்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீசனை கைது செய்தனர்.
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன போலீஸ் விசாரணை
மதுரை: வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் மாரீஸ்வரன்21.இவர் சில நாட்களாக மன உலச்சலில் இருந்து வந்தார்.
இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவனியாபுரத்தில் கத்தியால் தாக்கி செல்போன்பறிப்பு
மதுரை: மதுரைஅவனியாபுரம் சௌடேஸ்வரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெயில்முத்து49.இவர் மீனாட்சி நகர்பகுதியில் சென்றபோது இரண்டுவாலிபர்கள் அவரை வழி மறித்து கத்தியால் தாக்கி வெயில்முத்துவின் பத்தாயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம வாலிபர்களை தேடி வருகின்றனர்.
மூதாட்டியிடம் செயின் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை
மதுரை: மதுரை திருநகரில் மூதாட்டியிடம் செயின் பறித்த பைக் ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.
திருநகர் நெல்லையப்பபுரம் மெயின்வீதியை சேர்ந்தவர் பேச்சியம்மாள் 80.இவர் அந்தப்பகுதியிவ் வாட்டர்டேங்க அருகே நடந்து சென்றபோது,
பைக்கில் சென்ற இரண்டு ஆசாமிகள் அவர் அணிந்திருந்த நான்கரைபவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்று விட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக திருநகர்போலீசார் வழக்குப்பதிவுசெய்து செயின்பறித்த பைக் ஆசாமிகளை தேடிவருகின்றனர்.
மதுரை முடக்குச்சாலையில் பெண்ணிடம் செயின் பறிப்பு போலீஸ் விசாரணை
மதுரை: மதுரைமுடக்குச்சாலையில் பெண்ணிடம் செயின்பறித்த ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.
முடக்குச்சாலை இந்திராணி நகர் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர்சாலமன்ராஜா மனைவி செல்வமணி 35. இவர் அந்த பகுதியில் நடந்து சென்ற போது.
பைக்கில்சென்ற ஆசாமிகள் அவர் அணிந்திருந்த இரண்டரை பவுன் சங்கிலியை பறித்துச்சென்று விட்டனர்.இது குறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவுசெய்து செயின்பறித்த ஆசாமிகளை தேடிவருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்