தொழில் வளர்ச்சிக்கு முதலீடு பெற்று ஹோட்டல் உரிமையாளரிடம் ரூ 15 லட்சம் மோசடி
இரண்டுபெண்கள் உட்பட நான்கு பேரிடம் விசாரணை.
மதுரை மே 13 தொழில்வளர்க்க ஹோட்டல் முதலாளிடம் ரூ 15 லட்சம் முதலீடு பெற்று மோசடி செய்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேகே நகர் மூன்றாவது கிழக்கு தெருவை சேர்ந்தவர் பாலவைரவன் 40 .இவர் அராபியன் உணவு தயாரித்து விற்பனை செய்யும் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரிடம் அறிமுகமான நான்கு நபர்கள் கார்த்திகை ராஜன், கீதா, சாந்தி, ராஜசேகரன் ஆகியோர் தாங்கள் பழைய இரும்பு வியாபாரம் செய்வதாகவும் அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் இதில் தாங்கள் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறியுள்ளனர் .இவர்களின் வார்த்தையை நம்பிய பாலவைரவன் ரூ.15 லட்சம் முதலீடு செய்து ஆனால் பின்னர் முதலீடு செய்துள்ளாய்.பின்னர் கிடைக்கும் லாத்தில் பங்கும் தரவில்லை முதலீடு செய்த பணத்தையும் திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது .இது குறித்து ஹோட்டல் அதிபர் பாலவைரவன் அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேல மடையில் வீட்டின் கதவை உடைத்து ரூ 7ஆயிரம் திருட்டு
மதுரை மே 13 சிவகங்கை மெயின் ரோடு மேலமடையை சேர்ந்தவர் ராஜேஸ்வரி70 இவர் சம்பவத்தன்று வெளியூர் சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தன. அங்கு பீரோவில் வைத்திருந்த ரூ 7ஆயிரம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து மூதாட்டி ராஜேஸ்வரி அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து பணம் திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.
கூடல் நகரில் இரண்டு இடங்களில்கைவரிசை பைக் திருடிய சிறுவன் கைது
மதுரை மே 13 கூடல் நகரில் இரண்டு இடங்களில் பைக் திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
கோசாகுளம் திருமலை நகர்பகுதியில் வசிப்பவர் சலீம் 61. இவர் வீட்டின் முன்பாக தன்னுடைய பைக்கை நிறுத்தி இருந்தார்.அந்த பைக் சம்பவத்தன்று திருட்டு போய்விட்டது. இது குறித்து அவர் கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார்.
தபால்தந்திநகர் விரிவாக்கம் கோமதி நரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் 42. இவரும் தன் வீட்டின் முன்பாக தனக்கு சொந்தமான பைக்கை நிறுத்தியிருந்தார்.இந்த பைக்கும் திருடு போய்விட்டது. இந்த இரண்டு திருட்டுகளும் ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்துள்ளன. இது குறித்து சுரேஷ்குமார் கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் நிறுவப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது குற்றவாளியின் அடையாளம் தெரிந்தது. இந்த இரண்டு பைக்திருட்டிலும் கைவரிசை காட்டி பைக் திருடியது ஆனையூரை சேர்ந்த 17 வயது சிறுவன் என்று தெரியவந்தது. அவனை போலீசார் கைது செய்தனர்.
ஓடும் பஸ்ஸில் பயனிடம் 12 1/2 பவுன் திருட்டு இரண்டு பேர் கைது .
மதுரை மே 13 ஓடும் பஸ்ஸில் பயணியிடம் 12 1/2பவுன் தங்க நகை திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
பறவை அதிசயம் பார்க் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் குமார் 40 .இவர் அரசுப்பேருந்தில் பயணம் செய்தார் .அவர் கையில் பேக் ஒன்று வைத்திருந்தார்.அந்த பேக்கில் பன்னிரெண்டரை பவுன் தங்க நகையும் மேலும் சில பொருட்களும் வைத்திருந்தார்..இந்த பேருந்து மண்டேலா நகர் அருகே உள்ள ஒரு பேக்கரி அருகே சென்றபோது அவர் கையில் வைத்திருந்த பேக்கில் இருந்த 12 1/2 பவுன் தங்க நகை திருடுபொய்விட்டது.இந்த திருட்டு குறித்து ரமேஷ் குமார் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண் உட்பட 3 பேர் திருடியது தெரிய வந்தது.பின்னர் கள்ளந்திரி அப்பன்திருப்பதி தொப்புலாம் பட்டி முருகன் 48, அலங்காநல்லூர் ஆதனூர் பாண்டித்துரை 42 இருவரையும் கைது செய்தனர். அவருடன் உடன் இருந்த பெண் ஒருவரை தேடி வருகின்றனர்.
விளக்குத்தூணில் மிட்டாய் வியாபாரியை தாக்கிய கடை ஊழியர் கைது.
மதுரை மே 13 காமராஜர்புரம் குமரன் குறுக்கு தெருவை சேர்ந்தவர் வேலுசாமி 46. இவர் கடைகளுக்கு சென்று மிட்டாய் சில்லரைவிற்பனை செய்து வருகிறார் .கரிஷ்மா பள்ளிவாசல் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் குபேந்திரன். இவரும் மிட்டாய் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலுச்சாமி தனது இருசக்கர வாகனத்தை குபேந்திரன் கடைக்கு முன்பாக நிறுத்தி உள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த குபேந்திரன் வியாபாரி வேலுச்சாமியை சரமாரியாக தாக்கினார். இந்த தாக்குதல் குறித்து வேலுச்சாமி விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய குபேந்திரனை கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி