செல்லூரில் வீடு புகுந்து பெண் மீது தாக்குதல் 25 பவுன் திருட்டு ஒருவர் கைது
மதுரை ஜூலை 2 செல்லூரில் வீடு புகுந்து பெண் மீது தாக்குதல் நடத்தி 25 பவுன் திருடிச்சென்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர். செல்லூர் பூமி உருண்டை தெருவை சேர்ந்தவர் ஆசைத்தம்பி மனைவி லீனாவதி 38. சத்தியமூர்த்தி ஆறாவது தெருவை சேர்ந்தவர் நல்லதம்பி மனைவி சாந்தி. இவர்கள் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நல்ல தம்பி மனைவி சாந்தி, மகன் கவுதம்உறவினர்கள் தேனம்மாள், சக்கரை அம்மாள், நல்லதம்பி ஆகியோர் வீடு புகுந்து லீனாவதியை தாக்கி வீட்டில் இருந்த 25 பவுன் தாலி செயினை திருடிச் சென்று விட்டனர் .இந்த சம்பவம் குறித்து லீனாவதி செல்லூர் போலீஸ் புகார் செய்தார் .போலீசார் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து நல்ல தம்பியை கைது செய்தனர்.
அண்ணாநகரில் வாலிபரை தாக்கி கம்ப்யூட்டர் உடைப்பு போதையில் இருந்தமூன்று பேர் கைது .
கூடல் நகர் அஞ்சல் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்37.இவர் சிவகங்கை மெயின் ரோடு ஆவின் பால் பூத் எதிரே சென்று கொண்டிருந்தார் .அப்போது அவரை வழிமறித்த அண்ணா நகர் வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்த முத்துசாமி 57, மதுரை பொட்டை பனையூரை சேர்ந்த முருகன் மகன் செல்வராஜ் 34 ,மானகிரி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் 50 ஆகிய மூவரும் குடிபோதையில் அவரை தாக்கி காலால் உதைத்தனர். அவர் வைத்திருந்த கம்ப்யூட்டரை உடைத்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து ராஜேந்திரன் அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துசாமி, செல்வராஜ், முருகேசன் மூவரையும் கைது செய்தனர்.
ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோட்டில் கத்தி முனையில் வழிப்பறி வாலிபர் கைது .
மதுரை ஜூலை 2 ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் 42 .இவர் ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு திருமணம் மண்டபம் அருகே சென்றபோது அவரை வாலிபர் ஒருவர் வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி அவர் வைத்திருந்த ரூ360ஐ வழிப்பறி செய்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து மீனாட்சி சுந்தரம் ஜெயந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கருப்பாயூரணி கல்மேடுவை சேர்ந்த பூமிநாதன் மகன் ஆதி பரமேஸ்வரன் என்ற பரமன் 29 என்ற வாலிபரை கைது செய்தனர்.
திருப்பாலையில் பெண்ணிடம் மூன்றரை பவுன் தாலி செயின் பறிப்பு பட்டப்பகலில் சம்பவம்
மதுரை ஜூலை 2 திருப்பாலையில் பட்டப்பகலில் பெண்ணிடம் மூன்றரை பவுன் தாலிச் செயின் பறித்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை கோசாகுளம் ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் திருக்குமார் மனைவி ஜானகி 38 .இவர் ஜி ஆர் நகர் நான்காவது குறுக்கு தெருவில் சென்று கொண்டிருந்தார். அவர் அணிந்திருந்த மூன்றரை பவுன் தாலிச் சங்கிலியை பட்டப்பகலில் மர்ம ஆசாமி பறித்துச் சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து ஜானகி திருப்பாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செயின் பதித்த ஆசாமியை தேடி வருகின்றனர்.
*************
காதலித்து குழந்தை பிறந்த பின்பும்
திருமணம் செய்ய மறுப்பு
இளம் பெண் புகாரில்போலீஸ் விசாரணை
மதுரை ஜூலை 2 காதலித்து குழந்தை பிறந்த பின்பும் திருமணம் செய்ய மறுத்தவர் மீது இளம்பெண் கொடுத்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேல அனுப்பானடியை சேர்ந்தவர் அம்மாசி மகன் செந்தில்43.இவர் 20 வயது பெண்ஒருவரை காலித்து வந்தார் .அவரை திருமணம் செய்து கொள்வதாக அவர் கூறியதால் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு அந்த பெண்ணை திருமணம் செய்ய செந்தில் மரத்துள்ளார் .இதனால் ஏமாற்றம் அடைந்த அந்த பெண் அனைத்து மகளிர் டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் செந்தில் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம்விசாரணை நடத்தி வருகின்றனர்.
************
அவனியாபுரத்தில்
போதையில் 14 வயது சிறுமி பலாத்காரம்
வாலிபர் கைது.
மதுரை ஜூலை 2 அவனியாபுரத்தில் போதையில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அவனியாபுரம் பத்மா தியேட்டர்எதிரே வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் குமரவேல் மகன் செல்வகுமார் 20. இவர் குடிபோதையில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமி திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமையை பலாத்காரம் செய்த வாலிபர் செல்வ குமாரை கைது செய்தனர்.
*************
சிந்தாமணியில்
அதிகாலையில் வீடு புகுந்து நகையை திருடிய வாலிபர் கைது
மதுரை ஜூலை 2 சிந்தாமணியில் அதிகாலையில் வீடு புகுந்து நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிந்தாமணி இந்திரா காலனியை சேர்ந்தவர் சந்திரன் மகன் முனீஸ்வரன் 32. இவரது வீட்டிற்குள் அதிகாலையில் புகுந்த வாலிபர் வீட்டில் பீரோவில் வைத்திருந்த பத்தே முக்கால் பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து முனீஸ்வரன் கீரைத்துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது சிந்தாமணி இந்திரா நகரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் நல்லுசாமி 22 என்ற வாலிபர் திருடியது தெரிய வந்தது .
அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி