தாய் படுகொலை மகன் கைது!
மதுரை : கூடல்புதூர் மிளகரணை நடுத்தெருவை சேர்ந்தவர் மாதவன் (25), இவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இவருடைய தாய் சாந்தி (50) சம்பவத்தன்று அதிகாலை தாய் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகன் மாதவன் அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து தாயை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சாந்தி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் கூடல்புதூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது . இது குறித்து மிளகரனை சின்னக்கண்மாய் தெருவை சேர்ந்த உறவினர் பூமி கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தாய் சாந்தியை கொன்ற மகன் மாதவனை கைது செய்தனர்.
விளாச்சேரியில் ஒருவர் கைது!
திருநகர் விளாச்சேரி அண்ணா தெருவை சேர்ந்தவர் சுந்தர் (43), இவர் அதே பகுதியை சேர்ந்த பரமசிவன் மகன் பாண்டியராஜன் (32), என்பவரிடம் ரூபாய் 2 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். அவர் மூன்று லட்சத்து 50 ஆயிரம் வரை திருப்பி செலுத்தி விட்டார். இந்த நிலையில் மீண்டும் அதிக வட்டி கேட்டு பாண்டியராஜன் அவருடைய அம்மா பாண்டியம்மாள் அவருடைய சகோதரி பாரதிதேவி மூவரும் சுந்தரிடம் அதிக வட்டி மிரட்டியுள்ளனர். ஆபாசமாக பேசி அவருடைய மகனை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சுந்தர் திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார், பாண்டியராஜன், தாய் பாண்டியம்மாள், சகோதரி பாரதிதேவி ,மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து பாண்டியராஜனை கைது செய்தனர்.
பைபாஸ் ரோட்டில் கட்டிட தொழிலாளிகள் மோதல்
வடபழஞ்சி கண்மாய் தெருவை சேர்ந்தவர் மலைச்சாமி. உசிலம்பட்டி தாலுகா நடு முதலைக்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தரம் மகன் அன்பரசன் (29), இவர்கள் இருவரும் கட்டிடவேலை செய்துவந்தனர்.சம்பவத்தன்று இவர்கள் வேலைக்கு சென்று விட்டு அவர்களுக்குள் சம்பளம் பிரித்துக்கொண்டனர்.அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அன்பரசன் மலைச்சாமியை ஆபாசமாக பேசி கல்லால் தாக்கினார். இந்த சம்பவம் குறித்து மலைச்சாமி கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய அன்பர்சனை கைது செய்தனர் .
தல்லாகுளத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை!
சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் தனபாலா கிருஷ்ணன் (45), இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. நிரந்தரமாக வேலை கிடைக்கவில்லை. இதனால் வீட்டு செலவுக்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மனைவி அழகு சுந்தராம்பாள் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தனபால கிருஷ்ணனின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தத்தனேரியில் டிரைவர் சாவு
கூடல் புதூர் அப்துல் கலாம் நகரை சேர்ந்தவர் நாகேந்திரன் (62), இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். தத்தனேரி களத்து போட்டலில் உள்ள லாரி ஷெட்டில் இவர் இருந்தபோது திடீரென்று வலிப்பு நோய் வந்தது. அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி டிரைவர் மகேந்திரன் பரிதாமாக உயிரிழந்தார். இது குறித்து அவருடைய மகள் ஷாலினி செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் நாகேந்திரனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிற மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை ஒருவர் கைது
அனுப்பானடி பகலவன் நகரில் பிற மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வருவதாக தெப்பக்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப் இன்ஸ்பெக்டர் சுபத்ரா சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தார். அப்போது அங்கு லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த புது ராம்நாட் ரோடு பழைய மீனாட்சி நகர் அழகுமணி தெருவை சேர்ந்த அர்ஜுனன் (55), என்பரை பிடித்தனர். அவர் அந்த பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்தபோது அவர் பிரிபட்டார். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளையும் விற்பனை செய்த பணம் ரூ 2150 ஐயும் பறிமுதல் செய்து அவரை கைது செய்தார்.
இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் மூன்று வாலிபர்கள் கைது
கீரைத்துரை மின் மயானம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கீரைத்துரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த மூன்று பேரை பிரித்தனர். பிடிபட்ட வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மேல அனுப்பானடி வாசுகி தெரு பாண்டி மகன் அருண்குமார், கீரைத்துரை திரவிய லிங்கேஸ்வரர் கோவில் தெரு கிருஷ்ணமூர்த்தி மகன் வசந்தகுமார் (24), சிவகங்கை மாவட்டம் வெள்ளிகுறிச்சி ஆவாரங்காட்டை சேர்ந்த பாண்டி மகன் பாலமுருகன் என்ற கோளாறு 20என்று தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர் அவர்களிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி