ஜெய்ஹிந்த்புரத்தில் படுகொலையில் 4 பேர் சிக்கினர்!
மதுரை : மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் மணிகண்டன்(48), இவர் ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோடு எம.கே.புரத்தில் நகைக்கடை நடத்தி வந்தார். இவர் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகியும் ஆவார் நேற்று இரவு கடையில் வியாபாரம் முடிந்து பைக்கில் வீடு திருப்பிக் கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்து வந்த 5க்கும் மேற்பட்ட கும்பல் அவரை சுற்றி வளைத்து தாக்கி சராமாறியாக குத்தி விட்டு ஓடி விட்டனர். இதில் ரத்தவெள்ளத்தில் உயிருக்குபோராடிய மணிகண்டனை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை குறித்து மணிகண்டனின் மனைவி மகாலட்சுமி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தபகுதியில் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் முதல் கட்ட விசாரணையில் 5க்கும் மேற்பட்ட கும்பல் முகமூடி அணிந்து வந்து அவரை கொலை செய்தது தெரிய வந்தது .மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடைக்கலபுரத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் மகன் தினேஷ் என்ற மாடு தினேஷ் (27), ஜெய்ஹிந்துபுரம் நேதாஜி தெரு ஆனந்தகுமார் மகன் அஜித் குமார் என்ற குட்டை அஜித் (25), பாரதியாரோடு நேதாஜி நகர் முதல் தெரு அன்பு ராஜன் மகன் ஐயப்பன் (26), பாரதியார் ரோடு தேவர் நகர் முதல் தெரு கூலாண்டித்தேவர்மகன் கார்த்திக் என்ற பல்லுகார்த்திக் (26) ஆகிய நான்கு பேரையும் நான்கு பேரை பிடித்தனர். புறா பாண்டி உள்பட தப்பி ஓடிய சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.பிடிபட்ட நான்கு பேரிடமும் கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளாச்சேரியில் பெயிண்டர் பலி!
விளாச்சேரி பசும்பொன் தேவர் தெருவை சேர்ந்தவர் சின்ன சிவ நந்தி மகன் சிவராஜ் (39) இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இவர் வீட்டில் இருந்தபோது திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஹார்ட் அட்டாக் வந்து இருந்ததாக கூறியுள்ளனர். இது குறித்து அவருடைய மனைவி விஜயலட்சுமி திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பெயிண்டர் சிவராஜ் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முல்லை நகரில் தூக்கு போட்டு தற்கொலை!
நத்தம் மெயின் ரோடு சத்திரப்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி மகன் கோகுலகிருஷ்ணன் இவர் ஆணையர் முல்லை நகரில் வசித்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அதற்கான சிகிச்சை பெற்றும் வலி குறையவில்லை இதனால் வேதனையில் துடித்தவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவருடைய மனைவி மகேஸ்வரி கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கோகுல கிருஷ்ணனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
பயங்கர ஆயுதங்களுடன் 2 பேர் கைது!
ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சக்தி மணிகண்டன், இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் சோலையழகுபுரம் மூன்றாவது தெருவில் சந்தேகப்படும்படியாக பதுங்கிய வாலிபரை பிடித்தார். அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் குற்ற செயல் செய்யும் திட்டத்துடன் பதுங்கி இருப்பது தெரிய வந்தது .அவரிடம் மேலும் விசாரித்த போது அவர் சோலையழகுபுரம் மூன்றாவது தெரு பூமிநாதன் மகன் சேதுபதி கார்த்திக் என்ற தக்காளி கார்த்திக் என்று தெரியவந்தது. அவரை கைது செய்து அவரிடமிருந்து வாள் ஒன்றை பறிமுதல் செய்தார் .
காஜாதெருவில் ஒருவர்கைது :
தெற்கு வாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த், இவர் காஜா தெருவில் ரோந்து சென்ற போது அங்கு பதுங்கி இருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தார். அவர் தெற்கு வாசல் காஜா தெரு ராமமூர்த்தி (51), என்று தெரியவந்தது. அவரை சோதனை செய்தபோது அவரிடம் பட்டாகத்தி ஒன்றும் கத்தி ஒன்றும் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தார்.
மஸ்த்தான்பட்டியில் முதியவர் பலி!
மஸ்த்தான்பட்டி மெயின் ரோட்டை சேர்ந்தவர் இப்ராஹிம் (73), இவர் அந்த பகுதியில் சாலையை கடந்துசென்றபோது ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை முத்து மலை மகன் ஜெகதீஷ் (27), என்ற வாலிபர் ஓட்டி சென்ற கார் மோதி விபத்தானது. இதில் படுகாயம் அடைந்த முதியவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் செல்லும்வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து மகள் மும்தாஜ் பேகம் போக்குவரத்து புலனாய் பிரிவு போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் ஜெகதீஷ் மீது வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி