கூடுதல் வரதட்சனை கேட்டு, திருமணம் செய்ய மறுப்பு!
மதுரை : பசும்பொன் நகர் மாணிக்கவாசகம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ஹேம ஈஸ்வரி (50), இவருடைய மகளுக்கும் சென்னை பம்மல் மணிமேகலை தெருவை சேர்ந்த மகேந்திரன் மகன் சிரஞ்சீவி ராமனுக்கும் 2020 ஆம் ஆண்டு மதுரை பைபாஸ் ரோட்டில், ஹோட்டல் ஒன்றில் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பின்பு மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்கான எந்த ஏற்பாடும் செய்யவில்லை. திருமணம் நடக்க வேண்டும் என்றால் மேலும் கூடுதலாக வரதட்சணை கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளனர்.
தரமறுத்தால் திருமணம் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளனர். பெண்வீட்டார் பலமுறை முயற்சி செய்தும் அவர்கள் திட்டவட்டமாக திருமணத்திற்கு மறுத்துவிட்டனர். இது குறித்து பெண்ணின் தாய் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.காவல்துறையினர், மாப்பிள்ளை சிரஞ்சீவி ராமன், மாப்பிள்ளையின் தந்தை மகேந்திரன், தாய் அண்ணா காமு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல லட்சம் மதிப்புள்ள, பொருட்கள் திருட்டு!
ராமநாதபுரம் கடலாடி தாலுகா குருவடியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (40), இவர் காரில் மதுரை வந்திருந்தார். பாண்டி கோயில் ரோட்டில் பார் அருகே காலை நிறுத்தி இருந்தார் பின்னர் திரும்பி வந்து அவர் பார்த்தபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு காருக்குள் வைத்திருந்த லேப்டாப் ,ஐடி கார்டு, ஏடிஎம் கார்டு, முதலிய பொருட்களை மர்ம ஆசாமி திருடி சென்று விட்டார். இது குறித்து அவர் மாட்டுத்தாவனி காவல்துறையில் ,புகார் செய்தார்.
விஸ்வநாதபுரம் மருதுபாண்டியர் நான்காவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுகுமாரன் மகன் சுஜித் (36), இவர் மாவட்டம் நீதிமன்றம் அருகே உள்ள மண்டபத்தின் முன்பாக தனது காரை நிறுத்தி இருந்தார்.இவரது காரின் கண்ணாடியை உடைத்து காருக்குள் இருந்த லேப்டாப், டிஸ்க் முதலியவற்றை மர்ம ஆசாமி திருடிவிட்டார். இது குறித்து அவர் அண்ணா நகர் காவல்துறையில்,புகார் செய்தார்.
மதுரை மேலக்கால் மெயின்ரோடு மயில்வேல் முருகன்கோவில் அருகே வசித்து வருபவர் முருக பூபதி ராஜா (49), இவர் காளவாசல் ஐயப்பன் கோவில் அருகே தனது காரை நிறுத்தி இருந்தார். அந்த காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே வைத்திருந்த லேப்டாப் ஆப்பிள் பென்சில், ஹெட்செட் உள்பட ரூ 2 லட்சத்து 8ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்ம ஆசாமி திருடிச் சென்று விட்டார். இந்த திருட்டு குறித்து பூபதி ராஜா கரிமேடு காவல்துறையில், புகார் செய்தார். காவல்துறையில் ,வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை காவல்துறையினர், தேடி வருகின்றனர்.
கடைக்குள் புகுந்து, ரூ 43 ஆயிரம் திருட்டு!
கே.புதூரில் கடைக்குள் புகுந்து ரூ 43, ஆயிரம் திருடிய ஆசாமியை காவல்துறையினர், செய்து வருகின்றனர். வேலூர் மெயின் ரோடு திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ராஜா மலர் கம்பன் மகள் ரோஜா மலர் (33), இவர் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகே கணேஷ் நகரில் உள்ள காம்ப்ளக்ஸில் கடை நடத்தி வருகிறார்.இங்கு விற்பனை செய்து வைத்திருந்த பணம் ரூ 43 ஆயிரத்தை மர்ம நபர் திருடி சென்று விட்டார். இந்த திருட்டு பின்ன தெரிய வந்தது. இது குறித்து ரோஜா மலர் கே .புதூர் காவல்துறையில், புகார் செய்தார். காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.

திரு.ரவி