மதுரை : மதுரை ஏப்ரல் 30 விருதுநகர் மாவட்டம், சிவகாசி ரிசர்வ்லயனை சேர்ந்தவர் கருப்பையா (43), இவர் பொன்மேனி மூன்றாவது தெருவில் வசித்து வருகிறார். அவரது உறவினர் முனியாண்டி, இவர்களுக்கு இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று கருப்பையாவின் வீட்டருகே அவரை வழிமறித்து முனியாண்டி, ஐயனார் என்ற பிரதாப், வெங்கடேஷ் ஆகியோர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கருப்பையா எஸ் எஸ் காலனி , காவலில் புகார் செய்தார். போலீசார் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து, முனியாண்டியை கைது செய்தனர். அய்யனார் மற்றும் வெங்கடேஷ் தேடி வருகின்றனர்.
——————————————-
திடீர் வயிற்றுப் போக்கு நோய்க்கு இளம்பெண் பலி ,மதுரை ஏப்ரல் 30 செல்லூர் தாகூர் நகரை சேர்ந்தவர் பாண்டிச்செல்வி (22), இவருக்கு திடீர் வயிற்று போக்கு ஏற்பட்டு மயக்க நிலையை அடைந்தார். அவரை உடனடியாக சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அம்மா செண்பகவல்லி ,கொடுத்த புகாரில் செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
——————————————–
விசுவநாத புரத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல் ஒருவர் கைது
மதுரை ஏப்ரல் 30 விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் லிங்க நந்தி (65), இவர் ரிசர்வ்லயன் விசாலாட்சிபுரம், ஐந்தாவது தெருவில் கடை நடத்திவருகிறார். இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை, விற்பனை செய்து வந்தார். இந்த தகவல் அறிந்த தல்லாகுளம் காவல் உதவி ஆய்வாளர், சண்முகநாதன் கடையில் திடீர் சோதனை செய்தார். அப்போது கடைக்குள் இருந்து 58 தடை செய்யப்பட்ட புகையிலை ,பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தார். இவற்றை விற்பனை செய்ததற்காக அவர் லிங்கநந்தியை கைது செய்தார்.
————————————–
வடுக காவல் கூட தெருவில் பைக் திருட்டு, மதுரை ஏப்ரல் 30 பைபாஸ் ரோடு எஸ்பிஐ காலனி 3 வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (50), இவர் வடுக காவல் கூடல் தெருவில் தனக்கு சொந்தமான பைக்கை நிறுத்தி இருந்தார். ரூஐந்தாயிரம் மதிப்புள்ள இந்த பைக்கை ,மர்ம ஆசாமி திருடிச் சென்றுவிட்டார் . இந்த திருட்டு குறித்து ராஜேஷ் திலகர் திடல் காவலரிடம், புகார் செய்தார். காவலர் வழக்குப்பதிவு செய்து இவரது பைக்கை திருடிய, ஆசாமியை தேடி வருகின்றனர்.
———————————————-
தத்தனேரி சுடுகாட்டில், கஞ்சாவுடன் வாலிபர் கைது. மதுரை ஏப்ரல் 30 செல்லூர் காவல் உதவி ஆய்வாளர் திரு. அப்பாஸ், இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தத்தனேரி சுடுகாட்டில் கஞ்சாவுடன் வாலிபர் ஒருவரை பிடித்து, அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா விற்பனை செய்தவர் தத்தநேரி மெயின் ரோடு, பாரதி நகரைச் சேர்ந்த ராமர் (39), என்று தெரிய வந்தது. அவரை கைது செய்தார்.
————————————————
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி