3 பவுன் தங்க நகை, ஒரு லட்சம் திருட்டு
மதுரை : மதுரை அருகே பனையூர் அய்யனார்குரம் மண்டப தெருவை சேர்ந்தவர் பாண்டி மகன் பரமேஸ்வரன் (34), இவர் சம்பவத்தன்று குழந்தையை பள்ளிக்கு அனுப்புவதற்காக வீட்டை பூட்டாமல் சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகை, பணம் ரூ.1 லட்சத்தை மர்ம சாமி திருடி சென்று விட்டது தெரிய வந்தது.இது குறித்து அவர் சிலைமான் காவல்துறையில், புகார் செய்தார். காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து நகை பணம் திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.
கத்தி முனையில் வழிப்பறி, 3 பேர் கைது!
ஆரப்பாளையம் மேல பொன்னகரம் எட்டாவது தெருவை சேர்ந்தவர் கணேஷ் பாபு (34), இவர் மேல பொன்னகரம் மெயின் ரோடு அம்மா உணவகம் அருகே சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த மூன்று ஆசாமிகள் கத்திமுனையில், மிரட்டி அவரிடம் இருந்து ரூ 2150ஐ பறித்துச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து கணேஷ்பாபு கரிமேடு காவல்துறையில், புகார் செய்தார். காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மேல பொன்னகரம் இரண்டாவது தெருவை சேர்ந்த கிறிஸ்டி (29), அதே பகுதியைச் சேர்ந்த வேலப்பன் பத்தாவது தெருவை சேர்ந்த சிறில் ஆரோக்கியம் (27), விஜய் பிரான்சிஸ் என்ற தக்காளி விஜய் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
விஷம் குடித்து, வாலிபர் தற்கொலை!
பழங்காநத்தம் பசும்பொன் நகர் ஜீவா தெருவை சேர்ந்தவர் கார்த்திக் குமார் (31), இவர் மூளைநரம்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். இதனால் மனமடைந்து இருந்த கார்த்திகுமார் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உயிருக்கு போராடிய நிலையில், அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளிக்க சென்ற போது, வாலிபர் பலி!
செல்லூர் 50 அடி ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்தலிபு மகன் அசன் (24), இவர் புது நத்தம் ரோடு நாராயணபுரம் கண்மாய்க்கு குளிக்கச் சென்றார். அப்போது தண்ணீரில் மூழ்கி பலியானார். இந்த தகவல் அறிந்த தல்லாகுளம் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .இந்த சம்பவம் குறித்து தந்தை முத்தலிவு கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது சாவுக்கான காரணம் குறித்து காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவியை பிரிந்து சென்ற கணவர், தற்கொலை!
அண்ணா நகர் சதாசிவ நகர் புகழேந்தி தெருவை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (46), இவர் வண்டியூரில் கிரில் பட்டறையில், வேலை பார்த்து வந்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் பத்து நாட்களாக பிரிந்து பிரிந்து இருந்து வந்தார். இந்த நிலையில் வேலை பார்த்த பட்டரையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மனைவி சியாமளா கொடுத்த புகாரில் அண்ணா நகர் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து அரி கிருஷ்ணனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரில் வைத்து இருந்த செல்போன்கள், பணம் திருட்டு!
நரிமேடு பி டி ஆர் ரோட்டை சேர்ந்தவர் கருப்பையா மகன் மனோ (27), இவர் ஓட்டிச் சென்ற காரை பைபாஸ் ரோட்டில் நிறுத்தி இருந்தார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது காரின் கண்ணாடியை உடைத்து காருக்குள்ள வைத்து இருந்த இரண்டு செல்போன்களையும் பணம் ரூ 4500 ஐ மர்ம ஆசாமி திருடிச் சென்று விட்டார். இந்த திருட்டு குறித்து மனோஷ் S.S காலனி காவல்துறையில், புகார் செய்தார். காவல்துறையினர் , வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.
பயணியிடம் பணம் பாஸ்போர்ட் திருட்டு, வாலிபர் கைது!
மேலலூர்கருத்தபுளியம்பட்டியை சேர்ந்தவர் அயூப்கான் மகன் பிரேம் நசீர் (27), இவர் மாட்டுத்தாவணி முதலாவது பிளாட்பாரத்தில், பஸ்ஸூக்காக காத்திருந்தார். அப்போது அவர் பேக்கில் வைத்திருந்த பாஸ்போர்ட், கேஸ் புக், பேங்க் பாஸ்புக், பணம் ரூ 1240ஐ மர்ம ஆசாமி திருடிவிட்டார். இது குறித்து பிரேம் நசீர் மாட்டுத்தாவனி காவல்துறையில், புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அவரிடம் திருடியது செல்லூர் மீனாட்சிபுரம் சத்தியமூர்த்தி இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்த நாகலிங்கம் மகன் ராமபாண்டி (37), என்று தெரிய வந்தது. காவல்துறையினர் ,அவரை கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி