பயணிகளை ஏற்றுவதில் தகராறு ஓட்டுநர் கைது
மதுரை : மதுரை பைபாஸ் ரோடு நேரு நகர் மருதுபாண்டியன் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் அப்துல் அசிஸ் மகன் ஷாஜகான் (38), இவர் ஆட்டோ டிரைவர் ஆவார். மதுரை பாத்திமா நகர் விருமாண்டி மகன் மோகன் என்ற அரசு. இவரும் ஆட்டோ டிரைவர். இவர்களுக்குள் பயணிகளை ஏற்றுவதில் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று பைபாஸ் ரோட்டில் டீக்கடை முன்பாக இருவரும் நின்றபோது மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். ஷாஜகானை தாக்கிய மோகன் அவரது கைவிரலை கடித்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து ஷாஜகான் S.S காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் மோகனை கைது செய்தனர்.
திருமண மண்டப காவலாளி மீது தாக்குதல்
மதுரை : மதுரை ஆரப்பாளையம் T.Tமெயின் ரோட்டில் திருமண மண்டபம் ஒன்று உள்ளது. இதன் வாட்ச்மேன் ஜோசப் (68), இவர் பணியில் இருந்த போது வாலிபர் ஒருவர் தான் ஓட்டி வந்த வாகனத்தை திருமண மண்டபத்தின் முன்பு நிறுத்தி உள்ளார். இதனால் காவலாளி ஜோசப் சற்று தள்ளி நிறுத்தும்படி கூறியிருக்கிறார். இதற்கு மறுப்பு தெரிவித்த டிரைவர் கார்த்திக் அவரை ஆபாசமாக பேசி தாக்கினார். இந்த தாக்குதல் கீறித்து காவலாளி ஜோசப் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய ஆரப்பாளையம் புட்டு தோப்பு செக்கடி தெருவை சேர்ந்த ராமு மகன் டிரைவர் கார்த்திக் (31), கைது செய்தனர்.
மகள் மீது தாக்குதல் தந்தை கைது
நடராஜ் நகர் ஜான்சன் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் மகள் சோபிதா அபிதா (22) இவர் மணப்பெண் அலங்காரம் செய்து வருகிறார். இதனால் பலரிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். சில ஆண் நண்பர்களுடன் பேசி வந்ததால் தந்தை அவரை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்றும் தந்தை பாஸ்கரன் மகள் சோபிதாபிதாவையும் அவரது தாய் மற்றும் சகோதரியை ஆபாசமாக பேசி இருக்கிறார். இதை தட்டிக்கேட்ட சோபி ஆபிதாவை தாக்கி உள்ளார். இந்த சம்பவம் குறித்து சோபிதாஅபிதா கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மகளை தாக்கிய தந்தை பாஸ்கரனை கைது செய்தனர்.
கத்தி முனையில் வழிப்பறி 2 வாலிபர்கள் கைது
ஒத்தப்பட்டி காட்டுநாயக்கர் தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன் (56), இவர் T.P ரோட்டில் உள்ள சர்ச் அருகே தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சம்பவத்தன்றும் அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த (17) வயது சிறுவன் உள்பட 3 பேர் அவரை தட்டி எழுப்பி பணம் கேட்டுள்ளனர். அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கத்தியால் தாக்கி மீண்டும் பணம்பறிக்க முயற்சி செய்தனர். இதனால் நாகேந்திரன் கூச்சல் போட்டுள்ளார். பின்னர் அவர்கள் மூவரும் ஆங்கிலிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து நாகேந்திரன் S.S காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் (17) வயது சிறுவன் உள்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து அன்சாரி நகர் முதல் தெரு முபாரக் மகன் இம்ரான் சரி (19) வைத்தியநாதபுரம் முதல் தெரு சாதிக் பாஷா மகன் அப்துல் மாலிக் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
பைக்கில் சாகசம் செய்வதாக சண்டை செய்த இரண்டு வாலிபர்கள் கைது
நத்தம் மெயின் ரோடு ரிசர்வ் லைன் சாலையில் இருந்தபடியே பைக் ஓட்டி சாகசம் செயவதாக இரண்டு வாலிபர்கள் சண்டை செய்தனர். இதனால் சாலை கடக்க முடியாமல் பொதுமக்கள் அஞ்சினர் .இந்த சம்பவம் குறித்து அவர்கள் தல்லாகுளம் போலீசுக்கு புகார் செய்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு சாகசம் செய்த இரண்டு வாலிபர்களை பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை செய்தபோது திருப்பாலை உச்சபரம்புமேடு சுந்தர மூர்த்தி மகன் ரகுபதி (20) ,சின்னையா மகன் கண்ணன் (18) என்று தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
வீடு புகுந்து வெளிநாட்டு பொருட்கள் திருட்டு
மதுரை லேக் ஏரியா 11 வது தெருவை சேர்ந்தவர் பைசால் உமர் மகன் பைகான்பைசல் (25),இது இவருடைய தாத்தா வீடாகும். சம்பவத்தன்று இவரது வீடு புகுந்த மர்மநபர் வீட்டில் வைத்திருந்த வெளிநாட்டு பணம், கேமரா ,ஷுமுதலியவற்றை திருடி சென்று விட்டார். இந்த திருட்டு குறித்து பைகான்பைசால் மாட்டுத்தாவனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து. CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த திருட்டில் ஈடுபட்ட மானகிரி வடக்கு தெரு பீர்முகமது முகமது மகன் சையத் அலி 48 என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா செடி வளர்ப்பு, வாலிபர் கைது
மேலமடை எழில் நகரை சேர்ந்தவர் சிவகுமார் மகன் கார்த்திக் (21), இவர் கஞ்சா செடி வளர்த்து வந்தார். இது மூன்றடி உயரத்தில் வளர்ந்திருந்தது. இந்த நிலையில் இவர் கஞ்சா செடி வளர்ப்பது அண்ணா நகர் போலீசாருக்கு தெரியவந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று அடி உயரம் கொண்ட நான்கு கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக அவற்றை அழித்து அதை வளர்த்த வாலிபர் கார்த்திக்கை கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி