கீரைத்துறையில் ஆறு பேருக்கு வலை வீச்சு
மதுரை : சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மிளகனூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் பாண்டி (31), இவர் கீரைத்துறை சிந்தாமணி ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு ஆறு பேர் ஆறு வாலிபர்கள் சாப்பிட சென்றனர் அவர்கள் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றனர். அவர்களிடம் உரிமையாளர் பாண்டி பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து அவரை ஆபாசமாக பேசி கத்திமுன்னையில் மிரட்டினர். அவர் கல்லாவில் இருந்து ரூபாய் ஆயிரத்தையும் எடுத்துச் சென்று விட்டனர். இந்தச் சம்பவம் குறித்து உரிமையாளர் பாண்டி கீரை துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரிடம் பணம் பறித்த வாலிபர்கள் ஆவாரங்காட்டை சேர்ந்த லட்சுமணன் அகிலன், கண்ணன் என்ற கேடி கண்ணன், நிதீஷ் குமார், கோலிகுமார், தனுஷ் என்று தெரிய வந்தது. அவர்கள் ஆறு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
வண்டியூர் மெயின் ரோட்டில் 5 பேர் கைவரிசை
வண்டியூர் சி.எஸ்.ஆர், தெரு பாலச்சாமி மகன் விஜய் (26) இவர் வண்டியூர் மெயின் ரோடு மாநகராட்சி வாட்டர்டேங்க் அருகே சென்று கொண்டிருந்தார். அவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் வழிமறித்தனர். பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூபாய் 5400 ஐ வழிப்பறி செய்து தப்பினர். இந்த சம்பவம் குறித்து விஜய் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் பணம் பறித்த ஐந்து வாலிபர்களையும் தேடி வருகின்றனர்.
டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை
வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பூ மார்க்கெட் அருகே டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு வேலை பார்ப்பவர் சுந்தரமூர்த்தி மகன் லட்சுமணன் (25) சம்பவத்தன்று இந்த ஸ்டோருக்கு பொருட்கள் வாங்க இளம் பெண் ஒருவர் சென்றார். இவர் பொருட்களை தேர்வு செய்துகொண்டிருந்தபோது கடை ஊழியர் லெட்சுமணன் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதனால் அங்கிருந்து வெளியேறிய இளம்பெண் இது குறித்து அவர் பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் அந்த அந்தப் பெண்ணுடன் சென்று திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் அந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அங்கு வேலை செய்த கடை ஊழியர் லட்சுமணன் (25) என்ற வாலி வரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
காமராஜர் புரத்தில் வாலிபர் தற்கொலை
காமராஜர் புறம் கக்கன் தெரு முத்துராமலிங்கம் மகன் திருமுருகன் (23), இவர் அரசு வேலைக்காக கடந்த இரண்டு வருடங்களாக படித்து வருகிறார். இவர் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.இந்த நிலையில் இவர் வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அவர் பரிதாபமாக உயிரிழந்தார் இந்த சம்பவம் குறித்து திருமுருகனின் தந்தை முத்துராமலிங்கம் கீரைத்துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்ச மதிப்பிலான போதை பறிமுதல் போலீசார் அதிரடி வேட்டை
தல்லாகுளம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த ஆறு பேரை போலீசார் கைது செய்து 91 கிலோ புகையிலை பொருட்களையும் நான்கு செல்போன்கள் 4 இருசக்கர வாகனங்கள் பணம் ரூபாய் 2 லட்சத்து 67 ஆயிரத்து 160ஐயும் பறிமுதல் செய்தனர். பல்லாகுளம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ராஜேஷ் போலீசாருஞன் அதிரடி சோதனையில். அப்போது செல்லூர் ஆர்.கே. எம் காம்ப்ளக்ஸில் விற்பனை செய்த ஜலில் இப்ராஹிம் (61),எஸ் ஆலங்குளம் அலமேலு நகர் ராஜேந்திரன் மகன் பாண்டியராஜன் 27, ஒத்தக்கடை அண்ணாமலை நகர் மாரியப்பன் மகன் கணேசன் (39), செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு கருப்புசாமி மகன் முருகேசன் 58, செல்லூர் பூந்தமல்லி மாரியப்பன் மகன் தினேஷ் குமார் (26), மீனாட்சிபுரம் சத்தியமூர்த்தி ஐந்தாவது குறுக்கு தெரு திருச்சிற்றம்பலம் மகன் அருண்குமார் ஆகிய ஆறு பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 91 கிலோ தடை செய்யப்பட்ட பல்வேறு வகையான புகையிலை பாக்கெட் களையும் நான்கு இருசக்கர வாகனத்தையும் நான்கு செல்ஃபோனையும் விற்பனை செய்த பணம் ரூ 2 லட்சத்து 67 ஆயிரத்து 160ஐயும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கத்தி முனையில் வழிப்பறி வாலிபர் கைது
யானைக்கல் சோமசுந்தர அக்ரஹாரத்தைசேர்ந்தவர் நாகமலை மகன் நாகராஜ் (29),இவர் அதே பகுதியில் சென்றபோது இரண்டு வாலிபர்கள் அவரை கதிமனையில் மிரட்டி ரூபாய் 1500ஐ வழிப்பறி செய்தனர். இந்த சம்பவம் குறித்து நாகராஜ் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ஜெல் என்ற சல்மான் கான், வெங்கடேஷ்ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். ஜெல் என்ற சல்மான் கானை போலீசார் தேடி வருகின்றனர்.
வீட்டின் கதவை உடைத்து நகை பணம் கொள்ளை!
திருப்பரங்குன்றம் ஓம் சக்தி நகர் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மலையாண்டி மகன் முருகன் (31) சம்பவத்தன்று இவர் வெளியூர் சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் வைத்திருந்த ஒன்றரை பகவன் தங்க நகை, வெள்ளி கொலுசு, பணம் ரூபாய் 2ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து முருகன் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் வீட்டில் கொள்ளையடித்துச் சென்ற ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
கூடல் புதூரில் பைக் ஆசாமிகள் கைவரிசை
எஸ்.ஆலங்குளம் டிசைன்நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் விஜயகுமாரி (67) இவர் அதே பகுதியில் இரவு நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் சென்ற ஆசாமிகள் அவர் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்கச் செயினை பறித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து விஜயகுமாரி கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செயின் பறித்த பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி