நள்ளிரவில் வாலிபரை அறிவாளால் வெட்டி தண்டவாளத்தில் வீச்சு!
வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தென்றல் நகரை சேர்ந்தவர் சரவணகுமார் மகன் காந்தி ராஜா (28), தெற்கு வாசல் கிருதுமால் நதி ரோட்டை சேர்ந்தவர் மாய அழகு மகன் காளிதாசன். அவருடைய சகோதரர் கண்ணதாசன். இவர்கள், சகோதரியை காந்தி ராஜா காதலித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், நள்ளிரவில் தெற்கு வாசல் என்.எம்.ஆர்.பாலம் அடியில் சென்று கொண்டிருந்த காந்தி ராஜாவை காளிதாசனும் கண்ணதாசனும் வழிமறித்தனர்.
அவர்கள் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்து அவரது உடலை தண்டவாளத்தில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் தெற்கு வாசல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது .போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ளனர்.அவர்கள்கொலை செய்யப்பட்ட வாலிபர் காந்தி ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அண்ணன் தம்பிகளான, காளிதாசன், கண்ணதாசனை போலீசார் தேடி வருகின்றனர்.
சிலைமானில் கோவிலுக்குள் புகுந்து திருட்டு!
மதுரை அருகே சக்கிமங்கலத்தில் சிரி தர்மசாஸ்தா அய்யப்பன்கோவில் உள்ளது. இதன் கட்டுமானப்பனிகள் நடந்து வருகின்றன.இந்த நிலையில் கோவிலில் வைத்திருந்த கேரளாமாடல் குத்துவிளக்கை மர்ம ஆசாமி திருடிச்சென்று விட்டார். இந்த திருட்டு குறித்து கோவில் நிர்வாகி சக்கிமங்கலம் மெயின்ரோட்டை ச்சேர்ந்த ராமன் சிலைமான் போலீசில் புகார்செய்தார்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து கோவிலில் குத்துவிளக்கு திருடிய ஆசாமியை போலீசார் தோடி வருகின்றனர்.
மதுரை அருகே மகள் கண்முன்னே தந்தை பலி!
புதுவிளாங்குடி ராஜாஜிதெருவைச்சேர்ந்தவர் சண்முகராஜ் (55), இவர் மதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் ரோட்டில் பைக் ஓட்டிச்சென்று கொண்டிருந்தார். பின்னால் அவர் மகள் அமர்ந்திருந்தார். இந்நிலையில் அவர்கள் வரிச்சியூர் அருகே சென்றபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கீழே விழுந்தார். இதில் சண்முகராஜுக்கு பலமாக அடிபட்டு மயங்கிவிழுந்தார். அவரை சிகிச்சைக்காக பூவந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்துகுறித்து கருப்பாயிஊரணி போலீசார் வழக்குப்பதிவுசெய்து சண்முகராஜின் சாவுக்கான காரணம்குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்லூரில் தாக்குதல் 2 பேர் கைது
மதுரை பைபாஸ் ரோடு தீக்கதிர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் என்ற சோனையா (42), அதே பகுதியைச் சேர்ந்தவர் சத்யா நகரை சேர்ந்த ஆண்டிமகன் ராஜா, நவீன் இவர்கள் இருவரும் ஒரே பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவம் குறித்து முத்துக்குமார் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் ராஜா, நவீன் இருவர் மீது வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக செல்வி என்பவர் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமார் என்ற சோனனையாவை கைது செய்தனர்.
கஞ்சா விற்பனை செய்த மூன்று பேர் கைது
மதுரை பழங்காநத்தம் பகுதியில் சினிமா தியேட்டர் எதிரே கஞ்சா விற்பனை செய்வதாக மதுவிலக்கு போலீசருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த திடீர் நகர் பாஸ்கரதாஸ் நகர் 2வது காஜா மைதீன் (40), என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சாவையும் விற்பனை செய்த பணம் ரூ 9740, பைக் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். திருப்பரங்குன்றம் அவனியாபுரம் ரோடு சந்திப்புபகுதியில் கஞ்சா விற்பனை செய்த நாகமலை மேலக்குயில்குடி முருகன் (54) என்பவரை திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சாவையும் ரூபாய் 14 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். திருமங்கலம் என்.ஜி.ஓ. நகர் நான்காவது தெருவை சேர்ந்த அசோக் குமார் மகன் திவ்யதர்ஷன் 19 என்ற வாலிபர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்தபோது அவரை கைது செய்து அவரிடம் இருந்து 25 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுரையில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்த போலீசார் மொத்தம் ரூபாய் 13 ஆயிரத்து 740ஐ பரிமுதல் செய்தனர்.
மதுரையில் 26 பேர் கைது,105பாட்டில்கள் பறிமுதல்
மதுரையில் சட்டவிரோஊமாக மதுபாட்டில்கள் விற்பணைசெய்த 26 பேரை கைதுசெய்த போலீசார் அவர்களிடமிருந்து 105 மதுபாட்டில்களையும் பறிமுதல்செய்தனர். மதுரையில் அவனியாபுரம்,திருநகர்,திடீர்நகர்,சுப்பிரமணியபுரம்,திலகர்திடல் ,கரிமேடு,அண்ணாநகர் உட்பட பல்வேறு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து சட்டவிரோதமாக விறபணை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கிடைத்தது இதைத்தொடர்ந்து போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கினர். அப்போது 26 பேரை கைதுசெய்து மொத்தம் 105 பேரை கைதுசெய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி