கடையின் மேற்கூறையை உடைத்து திருட்டு
மதுரை : கருப்பாயூரணி சீமான் நகரை சேர்ந்தவர் நீதிராஜன் (50), இவர் அங்கு ஜெனரல் ஸ்டோர் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டா வீட்டுக்குச் சென்றவர் மறுநாள் காலை கடையை திறக்கச் சென்றார். அப்போது கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது.கடையில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன. கடை கல்லாவில் வைத்திருந்த ரூ.4 ஆயிரம் திருடு போயிருந்தது. இந்த திருட்டில் சிக்காமல் இருக்க கடையில் பொருத்தப்பட்டிருந்த மூன்று சிசிடிவி கேமராக்களையில் கொள்ளையர்கள் திருடிச்சென்று விட்டனர். இந்த திருட்டு குறித்து கடை உரிமையாளர் நீதிராஜன் மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் புகுந்து திருடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
கருத்து வேறுபாடு கணவர் தூக்கு போட்டு தற்கொலை!
மேல அனுப்பானடி கங்கா நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (42), இவருக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த ராமச்சந்திரன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி கீரைத் துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரப்பாளையத்தில் மூன்று பேர் கைது
ஆரப்பாளையம் மோதிலால் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (48), ஆரப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மூன்று வாலிபர்கள் கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூ இரண்டாயிரத்தை வழிப்பறி செய்துவிட்டனர். இந்த சம்பவம் குறித்து நாகராஜ் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட அருள் தாஸ் புரம் பழனிகுமார் மகன் சரவணன் என்ற தவளை சரவணன் (22), கரிமேடு அனிபா மகன் சல்மான் (19),தத்தனேரி களத்துப்பொட்டல்கேசவகுமார் மகன் பிரவீன்குமார் (22) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி