வைகை தென்கரையில் கொலைத்திட்டத்தில் பதுங்கி இருந்த மூன்று வாலிபர்கள் கைது: ஆயுதங்கள் பறிமுதல்:
மதுரை, பிப்: 28. கொலை செய்யும் திட்டத்தில் வைகை தென்கரையில் பட்டாக்கத்தியுடன் பதுங்கி இருந்த மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர் . மதுரை கரிமேடு போலீசார், வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வைகை தென்கரையில் புட்டு தோப்பு தோப்பில் கோவில் ஒன்றின் அருகே கும்பல் ஒன்று பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது .போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பதுங்கி இருந்த 3 வாலிபர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். பிடிபட்டவர்களை சோதனை செய்தபோது, அவர்கள் பட்டாக்கத்தி உட்பட ஆயுதங்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆரப்பாளையம் டி டி மெயின் ரோடு முருகேசன் மகன் ராஜேஷ் 21, அதே பகுதி வேலர் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் விக்னேஷ் 26, புது ஜெயில் ரோடு முரட்டன் பத்திரியை சேர்ந்த ஜெகநாதன் மகன் கீதேஷ் என்று தெரிய வந்தது. அவர்களை கைது செய்து எதற்காக அவர்கள் பதுங்கி இருந்தார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கொலை திட்டத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. யாரை கொலை செய்வதற்காக பதுங்கி இருந்தார்கள் என்பது குறித்து தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்டாய திருமணம் செய்ய பிளஸ் ஒன் மாணவி கடத்தல்: வாலிபர் கைது:
கட்டாய திருமணம் செய்ய பிளஸ்-1 மாணவியை, கடத்திய பைகாரா வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
முத்துராமலிங்கபுரம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் சண்முகம் சுந்தரம் மகன் சுதாகர் 23. இவர் +1 படிக்கும் மாணவியை திருமணம் செய்ய ஆசைப்பட்டார். இது குறித்து, பெற்றோருடன் சென்று பெண் வீட்டில் திருமணம் செய்து தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு பெண் வீட்டார் மறுத்துவிட்டனர். இதனால், ஆத்திரமடைந்த வாலிபர் அந்த பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்ய முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து, பெண்ணின் பெற்றோர்கள் அனைத்து மகளிர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து, கட்டாயதிருமணம் செய்ய பிளஸ் -1 மாணவியை, கடத்திய வாலிபர் சுதாகரை கைது செய்தனர்.
மேல வாசலில், வீடுபுகுந்து தனியாக இருந்த சிறுமி பலாத்காரம்: வாலிபர் கைது.
மதுரை ,மேல வாசலில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பல்க்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மேல வாசல் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் பாண்டி மகன் கருப்பசாமி 31. அந்த பகுதியில் சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்துகொண்டு அத்துமீறிஅந்த வீட்டிற்குள் நுழைந்தார் .அங்கு தனியாக இருந்த சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றார். சிறுமி கூச்சல் போடவே அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் .
இந்த சம்பவம் குறித்து, சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கருப்பசாமியை கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
