தடை செய்யப்பட்ட நாட்டிற்கு சென்று திரும்பிய பெண் கைது.
மதுரை: தடை செய்யப்பட்ட நாட்டிற்கு சென்று திரும்பிய பெண்ஒருவரை மதுரை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் இலந்தையடி ஊரை சேர்ந்தவர் பாஸ்கரன் மகள் நந்தினி 27. இவர் வெளிநாடு சென்று விட்டு மதுரை திரும்பினார் .
2019ஆம் ஆண்டு சென்றவர் நேற்று சொந்த ஊருக்கு திரும்பினார். அவரை இமிகிரேஷன் அதிகாரி இன்ஸ்பெக்டர் திரு.செந்தில்குமார் சோதனை செய்தபோது அவர் தடைசெய்யப்பட்ட ஏமன் நாட்டிற்குச் சென்று திரும்பியது தெரிய வந்தது. இது தொடர்பாக அவர் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தினியை கைது செய்தனர்.
கார் பார்க்கிங் கட்டிடத்தில் திருட்டு.
மதுரை: மீனாட்சி அம்மன் கோவில் அருகே கார் பார்க்கிங் நிறுத்துமிடத்தில் கட்டிட வேலை நடைபெற்று வருகிறது. அங்கு வைத்திருந்த ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை மர்ம நபர் திருடி சென்று விட்டார்.
இந்த திருட்டு தொடர்பாக இன்ஜினியர் திரு.கணேஷ்பாண்டியன் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இரும்பு பொருட்களை திருடிச்சென்ற ஆசாமியை தேடி வருகின்றனர்.
வாலிபரிடம் செல்போன் பறிப்பு 2 பேர் கைது.
மதுரை: அழகப்பன் நகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் நடராஜன் மகன் ராமச்சந்திரன் 19. இவர் காந்திஜி தெரு சம்பந்தர்தெரு சந்திப்பில் சென்றபோது அவரை இரண்டு பேர் வழிமறித்து அவரிடமிருந்த ரூபாய் ஐந்தாயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து ராமச்சந்திரன் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன் பறித்த ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சிவா 22, மீனாம்பிகை நகர் 5வது தெருவை சேர்ந்த பூமாரி மகன் ஹரிஸ்பாண்டி 21 இருவரையும் கைது செய்தனர்.
வீட்டின் முன்பாக நிறுத்தியிருந்த பைக் திருட்டு.
மதுரை: குடல் புதூர் எம் ஜி நகர் நர்மதா நதி மூன்றாவது தெருவை சேர்ந்தவர் விஜய் ஆனந்த் 38 இவருக்கு சொந்தமான ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள பைக்கை வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்தார்.
பின்னர் பார்த்தபோது அந்த பைக்கை மர்ம நபர் திருடி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து விஜய்ஆனந்த் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பைக் திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.