வீட்டை உடைத்து, நகை திருட்டு!
மதுரை : அண்ணாநகர் சதாசிவநகர் நக்கீரர் தெருவைச்சேர்ந்தவர் நாகராசன் (64), இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் புகுந்த மர்ம நபர் பீரோவில் வைத்திருந்த ஒன்றரை பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி நகையையும் திருடிச்சென்றுவிட்டார்.இந்த திருட்டு குறித்து நாகராசன் கொடுத்தபுகாரில் அண்ணாநகர் காவல் துறையினர், வழக்குப்பதிவுசெய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.
கே.புதூர் நகரில் ,மர்மநபரின் கைவரிசை!
கே.புதூர் மகாலிங்க நகர் முதல் தெருவைச்சேர்ந்தவர் முருகானந்தம். இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.பின்னர் வந்து பார்த்தபோது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த ஓட்டுனர் உரிமம்,ஏ.டி.எம்.கார்டு,ஆதார் அட்டை,வெள்ளிப்பொருட்களை மர்ம ஆசாமி திருடிச்சென்று விட்டார். இதுகுறித்து முருகானந்தம் தல்லாகுளம் காவல் துறையில் புகார் செய்தார். காவல் துறையினர், வழக்குப்பதிவுசெய்து திருட்டு ஆசாமியை தேடிவருகின்றனர்.
ஊழியர் தூக்குப்போட்டு, தற்கொலை!
ஜெய்ஹிந்துபுரம் மீனாம்பிகை நகர் ஒன்பதாவது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் சென்னையில் டீக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.இவர் விடுமுறையில் மதுரைக்கு வந்திருந்தார்.இந்நிலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஜெய்ஹிந்த்புரம் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து கோவிந்தசாமியின் தற்கொலை குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
வீடுபுகுந்து மிரட்டி பெண் பலாத்காரம், உறவினர் கைது!
வண்டியூர் மாணிக்கவாசகர்தெருவைசேர்ந்தவர் கார்த்திக் (40), இவர் தாசில்தார் நகரில் இருந்த உறவுக்கார பெண் ஒருவரை அவர் தனியாக இருந்தபோது வீடுபுகுந்து மிரட்டி அவரை பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம்குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண்கொடுத்த புகாரில் அண்ணாநகர் காவல் துறையினர், வழக்குப்பதிவுசெய்து கார்த்திக்கை கைது செய்தனர்.
டாஸ்மார்க் பாரில்மோதல், 4பேர்கைது!
ஜெய்ஹிந்துபுரம் மீனாம்பிகை நகர் ஐந்தாவது தெருவைச்சேர்ந்தவர் மணிகண்டன். இவர் ராமையாதெரு டாஸ்மார்க் பாரில், மது அருந்திக்கொண்டிருந்தார்.அங்கு நேதாஜிதெரு வெங்கடேசன்(44), ராமையாதெரு திலகர்தெரு ரவிக்குமார்(54), திடீர்நகர் ஆனந்த்38,நேருநகர் ரமேஷ்(44), இவர்களும் மது அருந்திக்கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.இதில் மணிகண்டனை அவர்கள் பீர்பாட்டிலால் தாக்கினர். இந்த தாக்குதல் குறித்து மணிகண்டன் ஜெய்ஹிந்துபுரம் புகார்செய்தார். காவல் துறையினர், காவல் துறையில் , வழக்குப்பதிவுசெய்து அவரை தாக்கிய வெங்கடேசன்,ரவிக்குமார்,ஆனந்த்,ரமேஷை கைதுசெய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி