தல்லாகுளத்தில் 4 வாலிபர்கள் கைது
செல்லூர் முத்துராமலிங்கபுரம் முதல் தெரு, 60 அடி ரோட்டை சேர்ந்தவர் ராஜசேகர பாண்டியன் மகன் விஜய் சுதர்சன் (26)
இவர், தல்லாகுளம் பிள்ளையார் கோவில் தெருவில் சென்று கொண்டிருந்தார். அவரை நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்தனர். அவர்கள் கத்தி முனையில் மிரட்டி, அவரிடம் இருந்து ரூபாய் 3 ஆயிரத்தையும் செல்போன் ஒன்றையும் பறித்துச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து, விஜய்சுதர்சன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர் .பின்னர் இந்த வழிப்பறியில் ஈடுபட்ட நிலையூர் கைத்தறி நகர் செந்தில் மகன் கார்த்திக் என்ற சுள்ளான் கார்த்திக் (26),திருநெல்வேலி நான்குநேரி தேன்ராஜ் மகன் அலெக்ஸ் பாண்டியன் (23), மினாம்பாள்புரம் பள்ளிவாசல் தெரு சங்கர் மகன் பிரவீன் குமார் என்ற சிரிப்பு பிரவீன் (26),செல்லூர் மீனாட்சிபுரம் வ. உ.சி தெரு முனியாண்டி மகன் பிரவீன் என்ற மிட்டாய் பிரவீன் (22) ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பேஸ்கட்பால் வீராங்கனை பலி
மதுரை ரயில் நிலையத்தில் பேஸ்கட் பால் வீராங்கனை மயங்கி விழுந்து பலியானார். சென்னை வில்லிவாக்கம் லட்சுமிபுரம் 11 ஆவது தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகள் அபி நந்தனா (15), இவர் பேஸ்கட் பால் வீராங்கனை ஆவார். விருதுநகரில் நடைபெறும் மேட்ச்சில் கலந்து கொள்வதற்காக சக விளையாட்டு வீரர்களுடன் ரயிலில் பயணித்தார்.இவருக்கு சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தது.இந்த நிலையில் போட்டியில் பங்கேற்பதற்காக விருதுநகர் சென்றார். ரயில் மதுரை வந்தடைந்தபோது, அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மதுரை ரயில்வே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக ரயில்வே மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேஸ்கட் பால் அசோசியேசன் மாவட்ட உறுப்பினர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகாயினி திலகர்திடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பேஸ்கட் பால் வீராங்கனை அபி நந்தனாவின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வைகை ஆற்று பாலத்தில் பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் கைது
மதுரை, வையாற்று பாலத்தில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தெப்பக்குளம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகன்.இவர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் வைகை ஆறு பி.டி.ஆர், பாலம் அடிப்பகுதியில், சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ஐந்து பேரை சுற்றி வளைத்து பிடித்தார். பிடிபட்டவர்களிடம் விசாரித்த போது அவர்கள் அனுப்பானடி அரசு மகன் மணிவண்ணன் (34), ராமு மகன் ராமகுரு (38), சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புலியூர் நடுத்தெரு வெள்ளையன் மகன் அஜித் குமார் (26),அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (22), சிவகங்கை மாவட்டம் கொந்தகை ஆண்டிச்சாமி மகன் குழந்தீஸ்வரன் (30)என்று தெரியவந்தது. அவர்களை சோதனை செய்தபோது அவர்கள் பயங்கர ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தனர் .அவற்றை பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தார். அவர்கள் என்ன திட்டத்தில் அங்கு பதுங்கி இருந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைக் ரேஸ் ஓட்டிய 14 வாலிபர்கள் கைது
நத்தம் புது பாலம் கீழ்பகுதியில் பயங்கர சத்தத்துடன் வாலிபர்கள் பைக் ரேஸ் ஓட்டிக்க் கொண்டிருந்தனர் .இந்தச்சம்பவம் விபத்தை ஏற்படும் விதமாக பொதுமக்களை அச்சுறுத்தியது. இதனால் அவர்கள் தல்லாதளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றார். அங்கு பைக் ரேஸ் ஓட்டிய 14 வாலிபர்களை பிடித்தார். பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் செல்லூர் இதயராஜபுரம் சேக்சுந்தர் மகன் முகமது சலீம் ,உத்தங்குடி வளர் நகர் முகமது மகன் ஹைதர் அலி ,கே.புதூர் முத்துராமலிங்கபுரம் சித்திக் ராஜா மகன் முஹம்மது ஆசிக்,கே புதூர் ராமவர்மா நகர் நாகூர் மகன் சையது சிராபுதீன் ,அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் நகர் ஷேக் தீன் மகன் அப்துல் ரகுமான், முகமது சிக்கந்தர் மகன் முகமது இப்ராஹிம், முஹம்மதுமிசானி மகன் முகமது அப்துல் அக்கீம், முகம்மது ஜஹாங்கீர் மகன் அப்துல் ரகுமான், உத்தங்குடி சிக்கந்தர் பாஜா மகன் அப்துல் அஜீஸ், உத்தங்குடி முத்துமுகமது மகன் சல்மான் கான், ஐயர் பங்களா முத்து செல்வம் மகன் ஆனந்தகுமார் ,கே புதூர் ஷேக் மைதீன் மகன் அப்துல் ரசாக், சையதுஅபுதாகீர் மகன் முகமது சம்சுதாவித்,சிம்மக்கல் ராதாமணிமகன்விஷ்னு என்று தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர்.அவர்கள் ரேஸ் ஓட்டிய பத்து பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி