மதுரை : மே 22 கரிமேடு மோதிலால், மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரபாகரன் (33), இவர் நாயக்கர் புது தெருவில் சென்ற போது, வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து, ரூபாய் 3420 ஐ வழிப்பறி செய்து விட்டார். இந்த சம்பவம் குறித்து பிரபாகரன் திலகர்திடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கரிமேடு ராஜேந்திரா மெயின் ரோட்டை சேர்ந்த தங்கபாண்டி மகன் ராஜ்குமார் என்ற தக்காளி ராஜ்குமாரை கைது செய்தனர்.
வாலிபரை வழிமறித்து, செல்போன், தங்க மோதிரம் பறிப்பு, மூன்று ஆசாமிகள் கைவரிசை.
மதுரை ஆணையூர் மல்லிகை நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் கணேசன் .இவர் கொன்னவாயன் சாலையில் ஒரு டீ கடை முன்பாக சென்று கொண்டிருந்தார். அப்போது மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் அவரை வழிமறித்து மிரட்டி அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க மோதிரம், ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஒன்றையும் பறித்துச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து கணேசன் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் நகை ,செல்போன் பறித்த 3 ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
கூச்சல் போட்டதை, தட்டிக் கேட்டவருக்கு மிரட்டல், தாக்குதல் 2 பேர் கைது.
அனுப்பானடி பொண்ணு பிள்ளை, தோப்பு வைச் சேர்ந்த மகேஸ்வரி (40), அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராஜேஷ், செந்தில், என்ற சுண்டு செந்தில், பொன்னுபிள்ளை தோப்பு வைச் சேர்ந்த மச்சக்காளை மகன் ஆனந்த பாண்டி (20), இவர்கள் அதே பகுதியில் ஆபாசமாக பேசி கூச்சல்போட்டுக் கொண்டிருந்தனர். இதை மகேஸ்வரி தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள், மகேஸ்வரியை ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அவர் கொடுத்த, புகாரின் பேரில் கீரைத்துரை காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து செந்தில், என்ற சுண்டு செந்தில், ஆனந்த பாண்டி, இருவரையும் கைது செய்தனர்.
முன்விரோதத்தில் மோதல், 3 பேர் கைது.
ஐயர் பங்களா இபி காலனி ஸ்ரீசக்ரா நகரை, சேர்ந்த நீதி மோகன் (43), அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ் (40), இவர்களுக்குள் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் டேவிட் தங்கமுத்து ,மற்றும் சிலருடன் சேர்ந்து அந்தப் பகுதியில் சென்ற, நீதிமோகனை வழிமறித்து அவரை சரமாரியாக, தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து நீதி மோகன் புகாரில் தல்லாகுளம் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து ராஜேஷ், தங்க முத்துவை கைது செய்தனர். எதிர் தரப்பில் ராஜேஷ், கொடுத்த புகாரில் நீதி மோகன் (43), பிரபு,ஜெய் என்ற செந்தில்குமார், 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து, நீதி மோகனை காவல் துறையினர், கைது செய்தனர்.
ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள ,இருசக்கரவாகனம் திருட்டு.
வண்டியூர் மெயின்ரோடு, சௌராஷ்டிரா புரத்தை சேர்ந்த சரவணன் மகன், ராஜகு மாரன்(19), இவர் தனக்கு சொந்தமான ரூபாய் .60 ஆயிரம் மதிப்புள்ள பைக்கை கோரிப்பாளையத்தில் உள்ள கல்லூரி முன்பாக நிறுத்தி இருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அந்த இரு சக்கரவாகனம், திருடு போயிருந்தது. இந்த திருட்டு குறித்து ராஜகுமாரன் தல்லாகுளம் காவல் துறையில், புகார் செய்தார் . காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து திருடிய ஆசாமியை, தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி