காவல் நிலையத்தில்பணியில் இருந்த பெண் ஏட்டு மயங்கி விழுந்து பலி
போலீஸ் கமிஷனர் அஞ்சலி.
மதுரை: மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண்ஏட்டு மயங்கி விழுந்து திடீரென்று பலியானார். அவரது உடலுக்கு போலீஸ் கமிஷனர் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
தேனி மெயின் ரோடு எஸ் எம் எஸ் காலனி அமிர்தா நகர் 5வது தெரு வை சேர்ந்தவர் தேவராஜ் மனைவி திருமதி.கலாவதி 40 .இவர் எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வந்தார்.
இவர் பணியில் இருந்தபோது அவருக்கு திடீரென்று வலிப்பு நோய் வந்தது. மயங்கிய நிலையில் அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து எஸ் எஸ் காலனி எஸ.ஐ.அழகு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உயிரிழந்த ஏட்டு திருமதி.கலாவதியின் உடல் பரிசோதனை முடிவடைந்த நிலையில் அவரது உடலுக்கு போலீஸ் கமிஷனர் திரு.பிரேம்ஆனந்த்சின்கா, துனை கமிஷனர்கள் ,உதவி கமிஷனர்கள் மற்றும் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பெண்ணிடம் 5 பவுன் நகை திருட்டு.
மதுரை: மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் எக்ஸ்ரே அறையில் பெண்ணிடம் 5 பவுன் தங்க நகை திருடியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிவலார் பட்டியை சேர்ந்தவர் அர்ஜுனா பெருமாள் இவரது மனைவி கௌசல்யாதேவி 32.இவர் ரிங்ரோடு பைபாஸ் ரோட்டில் உள்ள வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவர் எக்ஸ்ரே அறையில் காத்திருந்தபோது இவருக்கு சொந்தமான 5 பவுன் தங்க நகையை திருடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து கௌசல்யாதேவி கீரைத்துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.
கடையை உடைத்து பிஸ்கட் சிகரெட் பாக்கெட்டுகள் பணம் கொள்ளை.
மதுரை: மதுரை கூடல் புதூரில் கடையை உடைத்து பிஸ்கட் சிகரெட் பாக்கெட்டுகள் பணம் கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கூடல்புதூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஷமீம் பர்வீன் 33. இவர் கூடல்புதூர் மெயின் ரோடு பிஎஸ்என்எல் ரவுண்டானா அருகே கடை நடத்தி வருகிறார் .வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கடையை அடைத்துச் சென்ற நிலையில் அதிகாலை கடைதிறக்க சென்றார்.
அபபோது கடை உடைக்கப்பட்டிருந்தது. கடையில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டுகள் சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் பணம் ரூபாய் 390 ஐ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர் இந்த சம்பவம் குறித்து கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளைஅடித்துச்சென்ற ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
மதுரையில் முழு ஊரடங்கு: பலத்த போலீஸ் பாதுகாப்பு:
மதுரை: கொரோனா-ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு சார்பில் 3வது ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு மதுரை மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .
27 நிரந்தர சோதனைச் சாவடிகளில், மக்கள் யாரும் நடமாடுகிறார்களா வாகனங்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுகின்றனவா என்பது குறித்து சோதனை நடைபெறுகிறது .
80 தற்காலிக சோதனை தடுப்பு வேலிகள் அமைத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து, மதுரையின் முக்கிய பகுதிகளான கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையம், பழங்காநத்தம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும், ஆங்காங்கே சோதனை சாவடிகள் வைத்து வாகனங்களில் வருபவர்களை சோதனை செய்து பின்னர் அனுப்பி வைக்கின்றனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில், ஆக்ஸிசன் படுக்கை வசதிகளுடன் தயார். நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து, அரசு அறிவித்துள்ள மூன்றாவது வார ஞாயிற்றுக்கிழமையிலும் முழு ஊரடங்கு மதுரையிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி