காஜிமார் தெருவில் முன்விரோதத்தில் கத்திக்குத்து உருட்டுக்கட்டை அடி 2 பேர் கைது
மதுரை பிப் 21 காஜிமார் தெருவில் முன்விரோதம் காரணமாக நான்கு பேரை கத்தியால் குத்தி உருட்டு கட்டையால் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர் .காஜிமார்தெரு முதல் தெருவை சேர்ந்தவர் சையதுகாஜா இப்ராஹீம் 60. இவரது மகன்கள் சையது இப்ராஹிம் 20, சையது முகமதுஅலாவுதீன், சையதுநாசர்,சையதுகாஜா இப்ராஹிம். இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த முகமது காசிம் என்ற அஸ்வத் உசேன்63, முகம்மது பக்ருதீன் என்ற முனீர்33, இவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் முகமது காசில் ,பக்ருதீன் இவர்களுடன் 8 பேர் சேர்ந்து காசிமார் பெரிய பள்ளிவாசல் முன்பாக செய்யது காஜாஇப்ராஹீம் மகன்களை உருட்டுக்கட்டையால் தாக்கி கத்தியால் குத்திஉள்ளனர். இந்த சம்பவம் குறித்து செய்யதுகாஜா இபுராகிம் திடீர் நகர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் எட்டுபேர்மீது வழக்குப்பதிவு செய்து முகமது காசில், முகமது பக்ருதீன் இருவரை கைது செய்தனர் .தப்பி ஓடிய 6 பேரை தேடி வருகின்றனர்.
ஜெயந்திபுரம் ,கீரைத்துறையில் பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது.
மதுரை பிப் 21 ஜெய்ஹிந்த்புரம், கீரைத்துறையில் பணம் வைத்து சூதாடிய 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி மணிகண்டன். இவர் அரிஜன காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு பீரோகம்பெனிஅருகே ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களை சுற்றிவளைத்து முருகவேல் 39, செல்லப்பாண்டி 44, சக்திவேல் 42 உள்பட 6 பேரை கைதுசெய்தார். அவர்களிடம் இருந்து சூதாடிய சீட்டுகளை கட்டுகளையும் பணம் ரூபாய் ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.
கீரத்துரை பகுதியில் சூதாட்டம்
கீரத்துரை சப் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி வாழைத்தோப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு உள்ள ஒரு சிலையின் பின்புறம் பணம் வைத்து சூதாடிய அர்ஜுனன் 55 ,முருகன் 40 உள்பட 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 5600 ,மற்றும்சீட்டுகளையும் பறிமுதல் செய்தார்.
ஹீரா நகர் ரயில்வே தண்டவாளம் அருகே கொலை நோக்கத்துடன் பதுங்கியிருந்த ஒருவர் கைது
மதுரை பிப் 21 ஹீரா நகர் ரயில்வே தண்டவாளம் அருகே கொலை திட்டத்துடன் பதுங்கி இருந்த ஒருவரை கைது செய்து அவரிடமிருந்து வாள் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். திடீர்நகர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக். இவர் அதிகாலை ஹீரா நகர் ரயில்வேதண்டவாளப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது அவரை கண்டதும் ஒருவர் பதுங்கினார். அவரை பிடித்து விசாரித்தபோது அவர் ஹாஜிமார் மூன்றாவதுதெருவை சேர்ந்த மீரா ஜெயினுலாபுதீன் என்ற அஸ்கார் 59 என்று தெரியவந்தது .அவரை சோதனை செய்தபோது அவர் வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தார். அதை பறிமுதல் செய்து அவரிடம் விசாரித்தபோது கொலை செய்யும் திட்டத்தில் பதுங்கி இருந்தது தெரியவந்தது அவரை கைது செய்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி