வாலிபரை தாக்கிய 2 பேர் கைது.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் இரு சக்கர வாகனம் நிறுத்துவதில் நடந்த தகராறில் வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஜெயந்திபுரம் ஜீவா நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி 34 .இவருக்கும் சோலையழகுபுரம் நான்காவது தெருவைச் சேர்ந்த பிரபு என்ற வளர்ந்த பிரபு 40 இருவருக்கும் இடையே இரு சக்கர வாகனம் நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
இதில் வாக்குவாதத்தில் தொடங்கி தாக்குதலில் முடிந்தது. இந்த சம்பவத்தில் பிரபு என்ற வளர்ந்த பிரபு 40 ஆவது பிரிவைச்சேர்ந்த ஆரா அமுதன் 48 சோலைஅழகுபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் 26 , சக்திவேல் 26, அதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு 33,ஆகியோர் சுந்தரமூர்த்தியை கல்லால்தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஜெய்ஹிந்த்புரம்போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபு என்ற வளர்ந்த பிரபுவையும்வையும், திருநாவுக்கரசுவையும் கைது செய்தனர்.
சிறுவனுக்கு செக்ஸ் டார்ச்சர் ஒருவர் கைது.
மதுரைஅவனியாபுரத்தில் சிறுவனுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவனியாபுரம் என்எஸ்கே மெயின் ரோடு வைச் சேர்ந்தவர் பன்னீர்56.இவர் சிறுவன் ஒருவனை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவனுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து உள்ளார். இந்த சம்பவம் அவருடைய பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை டார்ச்சர் செய்த பன்னீரை கைது செய்தனர்.
கொலை திட்டத்தில் பதுங்கியிருந்த வாலிபர் வாளுடன் கைது.
மதுரை: மதுரை வாசல் பாலத்தின் அடியில்யில் கொலை திட்டத்துடன் பதுங்கி இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தெற்குவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.ராமலிங்கம். இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது என்.எம்.ஆர். பாலத்தின் அடியில் கிருதுமால் நதிரோட்டில் வாலிபர் ஒருவர் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தார். உடனடியாக அந்த வாலிபர் சுற்றி வளைத்து பிடித்து அவரிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் கீரத்துரை மேல தோப்பு வைத்திருந்த முருகேசன் மகன் ராஜேந்திரன் 36 என்று தெரிய வந்தது .அவரை சோதனை செய்தபோது அவர் வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தார். அந்த வாளை பறிமுதல் செய்து அந்த வாலிபரை கைது செய்தார்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் கொலை செய்யும் திட்டத்தில் அவர் பதுங்கி இருந்தது தெரியவந்தது. யாரைக் கொலை செய்ய திட்டமிட்டு இருந்தார் என்பது குறித்தும் எதற்காக கொலை செய்ய திட்டமிட்டார் என்பது குறித்தும் போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி கொலையில் 6 பேருக்கு வலைவீச்சு.
மதுரை: மதுரை சிலைமான் அருகே பாட்டம் என்ற ஊரைச் சேர்ந்தவர் பிச்சை மகன் விஜயகுமார் 27.இவர் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் பொறுத்தும் தொழில் செய்து வருகிறார். நான்கு வருடங்களுக்கு முன்பு சத்யபிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு ஆத்விக் என்ற இரண்டரை வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் விஜயகுமார் விராதனூர் மூத்தான்குளம் விலக்கு அருகே நேற்றுஇரவு நண்பருடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மணிகண்டன் ,அஜித் ,சந்தன கருப்பு, பிரபு ,கார்த்திக்,சங்கேஸ் ஆகிய 6 பேரும் விஜயகுமாருடன் தகராறில் ஈடுபட்டு அவரை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.
பலமாக குத்துப்பட்டு இருந்த நிலையில் விஜயகுமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார் .இந்த கொலை தொடர்பாக விஜயகுமாரியின் மைத்துனர் அசோக்குமார் சிலைமான் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இவருடைய கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் .கொலை செய்த ஆறு பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.
ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட ஆட்சியரே பரிசீலித்து அனுமதி வழங்கவேண்டும்.
மதுரை: அரசிதழில் பதிவு செய்யப்பட்ட ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட ஆட்சியரே நேரடியாக அனுமதி வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் டாக்டர் பி. ராஜசேகர் தலைமையில் கோமதிபுரத்தில் நடைபெற்றது .இந்த கூட்டத்தில் பேரவை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காலங்காலமாக ஜல்லிக்கட்டு நடந்து வந்த கிராமங்களின் பெயர் பட்டியல் அரசிதழ்பதிவில் வெளியாகி உள்ளது.
ஆனாலும் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட ஆட்சியர் மாநில அரசின் பார்வைக்கு அனுப்பி அனுமதி பெற்ற பின்னரே ஆணை பிறப்பிக்கிறார். வருங்காலத்தில் அரசிதழில் பதிவு பெற்ற ஊர்களுக்கு மாவட்ட ஆட்சியரே பரிசீலித்து அனுமதி வழங்கவேண்டும்.
கடந்த காலங்களில் மதுரை அருகே மேலூர்,உறங்கான்பட்டி போன்ற கிராமங்களில் தொடர்ச்சியாக மஞ்சுவிரட்டு ,ஜல்லிக்கட்டு நடத்தி வந்ததற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. மாவட்ட ஆட்சியர் இவற்றை பரிசீலித்து உரிய அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆட்டோ டிரைவர் மின்சாரம் தாக்கி பலி; போலீசார் விசாரணை:
மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்கா உட்பட்ட விளாச்சேரி பகுதியை சேர்ந்தவர் காதர் உசைன் மகன் ரசூல்தீன்(40). ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார்.
இவருக்கு , திருமணமாகி சுல்தானா என்கிற மனைவியும், பிலால் என்கிற மகனும் கோரி பீவி என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில், ரசூழ்தீன் இன்று காலை வீட்டின் மாடியில் துண்டை எடுக்க சென்றபோது எதிர்பாராத விதமாக அருகில் சாய்த்து வைத்திருந்த கம்பி மேலே இருந்த மின்கம்பியில் உரசியபடி சாய்ந்திருந்த கம்பி கீழ் பாகம் ரசூழ்தீன் மீது விழுந்ததில் மின்சாரம் பாய்ந்தது.
அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது குடும்பத்தினர் மதுரை திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து, திருப்பரங்குன்றம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.