ஓட்டலில் மது அருந்த மறுப்பு ஊழியருக்கு வாள்வெட்டு.
மதுரை: மதுரை காமராஜபுரம் கக்கன் தெருவை சேர்ந்தவர் குமரய்யா46. இவர் பழைய குயவர்பாளையம் ரோட்டில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.
இவரது மகன் முனீஸ்வரன் 19. இவர் ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வாசுதேவன், வசந்தகுமார், சதீஷ்குமார், செல்வகுமார், ஆகிய 4 பேர் ஓட்டலுக்கு வந்து உணவு அருந்துவது போல் பாவனைசெய்து மது அருந்த தொடங்கினர்.
இதை முனீஸ்வரனும் ,குமரய்யாவும் தடுத்தனர். அனுமதிக்க மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த நால்வரும் மறைத்து வைத்திருந்த வாளால் முனிஸ்வரனை வெட்டிவிட்டு ஓடி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து குமரய்யா கொடுத்த புகாரில் தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து வாசுதேவன், வசந்தகுமார், சதீஷ்குமார், செல்வகுமாரை தேடி வருகின்றனர்.
மூச்சுதிணறல் நோயால் பாதிக்கப்பட்ட இளம் பெண் தற்கொலை.
மதுரை: மதுரை கோரிப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் ஜெயசக்தி 20. அவருக்கு மூச்சு திணறல் நோய் இருந்தது.
அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். இளவயதில் நோயால் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தாய் முத்துலட்சுமி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாத்ரூமில் வழுக்கி விழுந்த வாலிபர் பலி.
மதுரை: மதுரை பழைய விளாங்குடி ரோடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் திவாகர்37. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதய நோயும் உள்ளது.
இந்நிலையில் பாத்ரூமிற்கு சென்றவர் கால்தவறி வழுக்கி விழுந்தார். இதில் தலையில் பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது தந்தை அழகர் கொடுத்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபரிடம் செல்போன் பறித்த பைக் ஆசாமிகள்இரண்டு பேர் கைது.
மதுரை: மதுரைதெற்கு வாசல் கிருதுமால் நதி ரோட்டை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் ராம் மனோகர் 18. இவர் பாண்டிய வேளாளர் தெருவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பைக்கில் வந்த 2 பேர் அவரை தாக்கி அவரிடம் இருந்த ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்று விட்டனர்.
சம்பவம் குறித்து ராம்மனோகர் தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அந்த தெருவில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டிவி.கேமரா பதிவுகளையும் ஆய்வுசெய்து எல்லிஸ் நகர் காந்தி தெரு 3வது தெருவைச் சேர்ந்த முபாரக் அலி21, ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி தெருவைச் சேர்ந்த ரமேஷ் 30 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
நிறுத்தி வைத்திருந்த பைக் திருட்டு.
மதுரை: மதுரை குருவிக்காரன் சாலை சாத்த மங்கலத்தைச் சேர்ந்தவர் முத்து 40. இவர் உறவினரை வழியனுப்ப மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு சென்றார்.
அவர் தான் ஓட்டிச் சென்ற பைக்கை நாலாவது பிளாட்பாரம் ஓரமாக நிறுத்தி இருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது.
அந்த பைக் காணவில்லை .திருடு போய் விட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து முத்து அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்