சிவராத்திரி அன்று தற்கொலை!
மதுரை : விளாங்குடி பொற்றாமரை நகர் பாண்டி மனைவி வசந்தி (50) இவர் சிவராத்திரி அன்று கணவரை கோவிலுக்கு அழைத்துள்ளார். கணவர் குடிபோதையில் இருந்ததால் வர மறுத்துவிட்டார். இதனால் மணமுடைந்த வசந்தி அழுத்தத்தில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கணவர் பாண்டி கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வசந்தியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநகர் பஸ் ஸ்டாப்பில் பலி!
திருநகர் நெல்லையப்பபுரம் முதலாவது தெருவைச் சேர்ந்தவர் ராஜா (51), இவர் கடந்த மூன்று வருடங்களாக குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் திருநகர் முதலாவது பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸுக்காக காத்திருந்தார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி சுதா திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதி மீது கொலை மிரட்டல் வழக்கு
மதுரை மத்திய சிறையில் மகேஷ் சண்முகம் என்பவர் குற்றவழக்கில்ல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சம்பவத்தன்று இவர் சக கைதிகளுடன் வாய்த் தகராறில் ஈடுபட்டார். இதை அறிந்த சிறை காவலர்கள் கண்ணன் மற்றும் பாண்டிய கண்ணன், பாண்டியன் இருவரும் சம்பவ இடத்திற்கு சென்று அவரை தடுத்து சிறைஅறைக்குள் அனுப்ப முயன்றனர் .அப்போது அவர்களிடமும் தகராறு செய்து சிறை காவலர் கண்ணனின் சீருடையை அவர் கிழித்துள்ளார். பின்னர் அங்கிருந்த சவரத் தொழிலாளியின் கத்தரி போன்ற ஆயுதங்களை உடைத்து தானும் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி உள்ளார். இதைத்தொடர்ந்து அவரை பிடித்து கைதி அறைக்குள் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிறை அதிகாரி பாலகிருஷ்ணன் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் கைதி மகேஷ்சண்முகம்மீது கொலை மிரட்டல் உட்பட இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி