போதை மாத்திரை விற்பனை, 5பேருக்கு வலைவீச்சு!
மதுரை : கீரைத்துறை காவல் உதவி ஆய்வாளர் திரு.சந்தான போஸ், இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் கீரை துறை வாழைத்தோப்பு சந்திப்பு பகுதியில் சென்ற போது சந்தேக படும்படியாக நின்றவர்களை பிடிக்க முயன்றார். அப்போது ஒருவர் பிடிபட்டார், நான்கு பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்டவரிடவரிடம் சோதனை செய்தார் அப்போது அவரிடம் போதை மாத்திரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரிடம் நடத்தியவிசாரணையில் சிந்தாமணி ராஜம்மான் நகர் நல்லசாமி மகன் விஜய் (23), என்பது தெரிய வந்தது. அ பிடிபட்ட விஜயிடம் மேலும் விசாரித்தபோது அவர்கள் மாணவர்களிடம் போதை மாத்திரை விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை பறிமுதல் செய்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக சிந்தாமணி ரோடு சண்முகவேல் மனைவி மணிமேகலை (23) ,காமராஜர்புரம் ஜோசப் நகர் முனீஸ்வரி 58, சிந்தாமணி ராஜம்மான் நகர் நல்லசாமி மகன் விஜய் (23),அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சூர்யா 23, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பட்டாக்கத்தி என்ற பாலாஜி ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விஜயை கைது செய்தனர் .தப்பி உடைய நான்கு பேரை தேடி வருகின்றனர்.
பெண்ணுக்கு அரிவாள் வெட்டு, 3 பேர் கைது!
சிக்கந்தர் சாவடி சுசி நகரை சேர்ந்தவர் பாண்டியம்மாள் (50), இவருடைய மகனுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இதை அவர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம்அடைந்த அந்த நபர்கள் இவர் கூடல் நகர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்து ஆபாசமாக பேசி அறிவாளால் வெட்டினர். இந்த சம்பவம் குறித்து பாண்டியம்மாள் கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார்.
காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிந்தாமணி கல் உடையான் கோவில் தெருவை சேர்ந்த சந்திரசேகர் மகன் சதீஷ்குமார் (23), அலங்காநல்லூர் சிக்கந்தர் சாவடியை சேர்ந்த ராஜா 40, கோவில் பாப்பாகுடி மதர் தெரசா ரோட்டை சேர்ந்த சந்திரசேகர் மகன் தினேஷ்குமார் (25), ஆகிய மூவரையும் கைது செய்தனர். படுகாயமடைந்த பாண்டியம்மாள் மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தனியார் நிறுவன ஊழியர் பலி!
திருமங்கலம் கப்பலூர் காந்திநகரை சேர்ந்தவர் மணிகண்டன் 3.9 இவர் கப்பலூர் சிட் கோவில் வேலை பார்த்து வந்தார். இவர் அதிகாலை காலகடன்களை முடிக்க வீட்டின் அருகே சென்றிருந்தார். அப்போது கால் தவறி கால்வாயில் விழுந்தார். அவர் அங்கிருந்த தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அந்த ஆஸ்டின்பட்டி போலீசார் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீராத வயிற்று வலி, ஊழியர் தீக்குளித்து தற்கொலை!
கீழகள்ளந்திரியை சேர்ந்தவர் பாண்டியன் மகன் பிரித்திவிராஜ் 22. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்தது. அதற்கான சிகிச்சை பெற்றும் குணம் அடையவில்லை. இதனால் வழி தாங்க முடியாமல் வீட்டில் இருந்தபோது திடீரென்று மண்ணெண்னை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.இதில் உடல் கருகிய நிலையில், இவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவருடைய அப்பா பாண்டியன் ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி