ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ஐந்து பேர் கைது
மதுரை : கீரைத்துரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்வம் .இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அனுப்பானடி பொண்ணுதோப்பு அருகே சென்றபோது சந்தேகப்படும் படியாக இரண்டு வாலிபர்களை பிடித்தார். அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் அறிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து பிடிபட்ட வாலிபர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் அனுப்பானடி அம்பேத்கர் நகரை சேர்ந்த அண்ணன் தம்பிகளான போஸ் மகன் பிரவீன் குமார் என்று ஐயர்( 25), தம்பி செந்தில் குமார் 19 என்று தெரியவந்தது. அவர்களை கைது செய்தார்.
திருநகரில் மூன்று பேர் கைது : திருநகர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குமாரி. இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். தனக்கன்குளம் போஸ்ட் ஆபீஸ் அருகே சென்றபோது போலீசை கண்டதும் நான்கு பேர் கொண்ட கும்பல் ஓடிச்சென்று பதுங்கினர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.அவர்களில் மூன்று பேர் பிடிபட்டனர்.ஒருவர் தப்பி ஓடிவிட்டார். அவர்களிடம் சோதனை செய்தபோது கத்தி, அரிவாள் இருந்தது. அவற்றை பைக் ஒன்றில் மறைத்து வைத்திருந்தனர். அவற்றை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது திருநகர் மெயின் ரோடு ஜோசப் நகர் சின்னசாமி மகன் சுந்தரமூர்த்தி (23), விளாச்சேரி ஆதி சிவன் நகர் உதயன் மகன் அலெக்ஸ்( 23),திருநகர் ஜோசப் நகர் மூன்றாவது தெரு பிச்சை மகன் சுரேஷ் (23), நெல்லையப்பபுரம் அருண் (41 )என்று தெரியவந்தது. அவர்களில் அருண் தப்பி ஓடிவிட்டார் மற்ற மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மாட்டுத்தாவணி எதிரே சென்னை கும்பல் கைது
சென்னையை சேர்ந்தவர் முருகன் இவர் மதுரை மாட்டுத்தாவணி எதிரே லாட்ஜ் ஒன்றில் தங்கி இருந்தார். இவருடைய உறவினர் நெல்லை மாவட்டம் முக்கூடலை சேர்ந்த முப்புடாதி மனைவி காளீஸ்வரி. இவர் தனது மாமா முருகனை சந்திக்க மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள லாட்ஜுக்கு சென்றார் .அவரை சந்தித்து விட்டு இருவரும் வெளியே வந்தனர்.அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கி தாக்கினர். காளீஸ்வரியை கீழே பிடித்து தள்ளிவிட்டு முருகனை காரில் வழுக்கட்டாயமாக கடத்திச்சென்றனர். இந்தச்சம்பவம்குறித்து காளீஸ்வரி கே புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் .கடத்தல்கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசார் சி.சி.டிவி கேமரா பதிவுகளையும் ,செல்போன் நம்பரையும் டிரேஸ் செய்தனர். அப்போது சென்னை என்னூர் பகுதியில் ஒரு வீட்டை காட்டியது. தனிப்படையினர் சம்பவ வீட்டிற்கு சென்று பார்த்தபோது ஆனந்த் என்பவர்கள் வீடு என்று தெரியவந்தது. அந்த வீட்டிற்குள் முருகனை அந்தக்கும்பல் அடைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.போலீசார் கடத்தப்பட்ட முருகன மீட்டனர்.இந்த கடத்தலில் ஈடுபட்ட மணி, ஆனந்த், சுரேஷ்குமார், அலெக்ஸ் பாண்டியன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர் .கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். சம்பவம் நடந்து 48 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் புலன் விசாரணை செய்து கடத்தல் கும்பலை பிடித்து பிடித்தனர். இவர்களை போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் பாராட்டினார்.
முதியவர் மீது தாக்குதல் மூன்று பேர் கைது
தேற்குவெளி வீதி பழைய மகாளிப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் லட்சுமணன் (72),தெற்குமாசி வீதி ஜடாமுனி கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜகோபாலன் (47), இவர்களுக்குள் மூதாதையர் சொத்து சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் ராஜகோபாலன் நான்கு பேருடன் சென்று லக்ஷ்மணனை ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து முதியவர் லட்சுமணன் தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் இந்த தாக்குதல் குறித்து நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து ராஜா கோபாலன் (47 ),ரங்கன் ஆசாரி தெரு ரமேஷ் மனைவி ராதிகா (43),பொதும்புவை சேர்ந்த மகேந்திரன் (63) ஆகிய மூவரையும் கைது செய்தனர் . பொதும்புவைச் சேர்ந்த ஸ்ரீ மான் என்பவரை தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி