110 பவுன் நகை கொள்ளை மூன்று வாலிபர்கள் கைது!
மதுரை : கோரிப்பாளையம் கான்சாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அந்தோணி (83), இவர் ஓய்வு பெற்ற மில் அதிகாரியாவார். சம்பவத்தன்று இவர் வெளியூர் சென்றிருந்த நேரம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் அவர் பீரோவில் வைத்திருந்த 110 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து அந்தோணி தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். விசாரணைக்கு பின்னர் இதில் தொடர்புடைய மூன்று பேரை கைது செய்தனர். கோரிப்பாளையம் கான்சாபுரம் மணிமகன் விஜயகுமார் (36) ,திருவேடகம் கணேசன் (46), காளவாசல் வெள்ளைக்கண்ணு தியேட்டர் ரோடு அய்யனார் மகன் செல்வகுமார் (33) ஆகிய முகரையும் போலீசார் கைது செய்தனர் .அவர்களிடம் இருந்து ஏழரைப்பவுன் தங்க நகைகளையும், பணம் ரூபாய் எட்டுலட்சத்து ஆயிரத்தையும் ,மூன்று இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மீதமுள்ள நகைகள் பற்றி விசாரித்த போது 80 பவுன் தங்க நகைகளை ரூபாய் 25 லட்சத்திற்கு தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளையர்கள் அடகு வைத்தது தெரிய வந்தது. இது தொடர்பாக பிடிபட்ட மூன்று வாலிபர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போட்டோ வீடியோ படம் எடுத்த ஐந்து வாலிபர்கள் கைது!
T.R.O காலனியில் நடுரோட்டில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி ஐந்து வாலிபர்கள் விதவிதமாக வீடியோ படமும் செல்போனிலும் படம் எடுத்துக் கொண்டிருந்தனர். இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் செல்ல முடியாமல் இடையூறாக இருந்தது. இது குறித்து தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ்சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையில் போலீசார் சம்பவத்திற்கு சென்றனர். அவர்கள் அங்கு பொதுமக்களுக்கு இடையூறாக நடுரோட்டில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்போனிலும் வீடியோவுடன் படம் எடுத்துக் கொண்டிருந்த ஐந்து வாலிபர்களை பிடித்தனர் .அவர்களிடமிருந்து இரண்டு பைக்குகள் ,நான்கு செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட வாலிபர்களிடம் விசாரித்தபோது அவர்கள் செல்லூர் சிவகாமி நகர் மாயன் மகன் விபின்குமார், அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் தமிழ்செல்வன், பில்லப்பன் மகன் முத்துப்பாண்டி, மீனாட்சி சுந்தரம் மகன் சூர்யா, கர்ணன் மகன் ஜெயகிரி ஆகியோர் என்று தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றத்தில் 7 பேர் கைது!
திருப்பரங்குன்றம் பொது கழிப்பிடம் அருகே புதரில் பணம் வைத்து சுதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருப்பரங்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பணம் வைத்து சூதாடிய ஏழு பேரை பிடித்தனர். அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகளையும் சூதாடிய பணம் ரூ 690ஐயும் பறிமுதல் செய்தனர்.பின்னர் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் திருப்பரங்குன்றம் திருமலையூர் பாண்டி 45, ராஜீவ் காந்தி நகர் 5வதுதெரு ஜெயராமன் (65), அதே பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் ரஞ்சித்குமார் (23), அழகர் (41), முத்து(40),கார்த்திக் (41),ராஜேந்திரன் (56) என்று தெரியவந்தது. அவர்கள் ஏழு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்