மாட்டுத்தாவணி அருகே அரசு பஸ் மோதி பைக்கில் சென்ற வாலிபர்பலி
மதுரை மே18 மாட்டுத்தாவணி அருகே அரசு பஸ் மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலியானார். ஜெய்ஹிந்த்புரம் மகாலெட்சுமி கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி மகன் கார்த்திக் குமார் 26.இவர் மாட்டுத்தாவனி பேருந்து நிலையம் பழைய போலீஸ் ஸ்டேஷன்அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையிலிருந்து திருச்சி சென்ற அரசு பஸ் மோதி விபத்தானது .இதில் தலை குப்புற கீழே விழுந்த வாலிபர் கார்த்திக் குமார் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் குமார் பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து அவருடைய அம்மா சுமதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் அரசு பஸ் டிரைவர் விருதுநகர் தவசலிங்காபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் 46 மீது வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காந்தி மியூசியம் அருகே சமூக நலத்துறை அலுவலரிடம் செயின் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை.
மதுரை மே 18 காந்தி மியூசியம் அருகே சமூக நலத்துறை அலுவலரிடம் செயின்பறித்த பைக் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை அருகே மாத்தூர் குருத்தூரை சேர்ந்தவர் அமுதா 52. இவர் சமூக நலத்துறையில் கிராம பெண்கள் நல அலுவலராக பணியாற்றி வருகிறார். சித்திர திருவிழாவை ஒட்டி நடக்கும் சித்திரை பொருட்காட்சியில் சமூக நலத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள ஸ்டாலில் இருந்து இரவு வீட்டுக்கு திரும்பினார். அவர் காந்தி மியூசியம் ரோட்டில் சென்றபோது பைக்கில் வந்த ஆசாமிகள் அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச்செயினை பறித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து அமுதா தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செயின் பறித்த பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
ரிங் ரோடு அம்மா திடலில் பயங்கர ஆயுதங்களுடன் ஆறு பேர் கைது
மதுரை மே 18 ரிங் ரோடு அம்மா திடலில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.அண்ணா நகர் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ரிங் ரோடு அம்மாதிடல் அருகே சென்றபோது கும்பல் ஒன்று பதங்கி இருப்பதை கண்டார். அவர்களை போலீசாருடன் சுற்றி வளைத்து பிடித்தார். அவர்களிடம் சோதனை செய்தபோது அவர்களிடம் இரண்டு கத்திகள் இரண்டு கயிறுகள் நான்கு கர்ச்சிப்புகள்க மிளகாய் பொடி பாக்கெட்டுகள் இரண்டு இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தார். பிடிபட்டவர்களிடம் மேலும் விசாரணை நடத்தினார். விசாரணையின் போது அவர்கள் கரும்பாலை நடுத்தெரு கிருஷ்ணன் மகன் கார்த்திக் என்ற லெப்ட் கார்த்திக் 27, திருப்பதி 25, கரும்பாலை நாகராஜ் மகன் விக்னேஷ் என்ற விக்கி 26, அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் மகன் கனிஷ்கர் 26, விஸ்வநாதன் மகன் சரவணன் 26, திருப்பாலை ரெட்ரோஸ் தெருவை சேர்ந்த சின்னத்தம்பி மகன் அஜித் குமார் 33 என்று தெரியவந்தது. அவர்கள் ஆறு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
சொக்கி குளத்தில் பைக்கில் ஸ்டென்ட் நடத்திய சிறுவன் உட்பட மூன்று பேர் கைது.
மதுரை மே 18 சொக்கிகுளத்தில் பைக்கில் ஸ்டென்ட் நடத்திய சிறுவன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.சொக்கிகுளம் வல்லபாய் மெயின் ரோட்டில் மூன்று வாலிபர்கள் பைக் ஓட்டி ஸ்டென்ட் நடத்தி விளையாடிக் கொண்டிருந்தனர் .இதனால் விபத்தும் ஏற்படும் அபாயம் இருந்தது. பொதுமக்கள் இது குறித்து தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் அங்கு பைக்கில் வேகமாக ஓட்டி விபரீதமான முறையில் ஸ்டண்ட் நடத்திய காமராஜ் நகர் ஷரீப் மகன் நியாஸ் 25, செல்லூர் சக்தி மாரியம்மன் கோவில் தெரு, குருநாதன் மகன் மீனாட்சி சுந்தரம் 21, மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்தனர். அவர்கள் ஓட்டிச் சென்ற இரண்டு பைக்குகளையும் மூன்று செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கரும்பாலையில் கத்தி முனையில் ரூ 5ஆயிரம் வழிப்பறி ரவுடி உள்பட 9 பேர் கைது
மதுரை மே 18 கரும்பாலையில் கத்திமுனையில் ரூ 5ஆயிரம் வழிப்பறிசெய்த ரவுடி உட்பட ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.கரும்பாலை கீழத்தெரு ராஜாமுகமது மகன் முஹம்மது அப்துல்லா 18. இவர் கரும்பாலை கம்யூனிட்டி சென்டர் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஒன்பது பேர் கொண்ட கும்பல் கத்திமுனையில் வழிமறித்து மிரட்டி அவரிடம் இருந்து ரூ ஐந்தாயிரத்தை வழிப்பறி செய்துவிட்டனர். இந்த சம்பவம் குறித்து முகமது அப்துல்லா அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கரும்பாலை பி டி காலனியை சேர்ந்த பழனிச்சாமி மகன் ரவுடி அருண்பாண்டி, அதே போதையைச் சேர்ந்த செல்வம் மகன் வினோத்குமார், பால்பாண்டி மகன் பால சக்தி , முருகன் மகன் தமிழ் இனியன், இருளாண்டி மகன் ராமச்சந்திரன், ஸ்டீபன் ராஜ் மகன்ஹரிவிக்னேஷ், கார்த்தி என்ற எலி கார்த்தி, ரவி மகன் சோனியமுத்து ,கே கே நகர் திருநாவுக்கரசு மகன் சித்திரவேல் 28 உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி