நள்ளிரவில் 2 வாலிபர்கள் பலி!
மதுரை : திருப்பரங்குன்றம் படப்பிடி தெருவை சேர்ந்தவர் கௌதம் (24), அதே பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் 24. இவர்கள் இருவரும் நள்ளிரவு திருப்பரங்குன்றத்தில் இருந்து திருநகருக்கு பைக்கில் சென்றனர். இவர்கள் குடிபோதையில் பைக்கை ஓட்டி சென்றனர் .இந்த நிலையில் திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோடு வேயிலுக்கு உகந்த அம்மன் கோவில் அருகே சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பில் பைக் மோதி விபத்தானது. அப்போது பைக்கில் சென்ற இருவரும் தலைக்கு போற கீழே விழுந்தனர். அப்போது அந்தவழியாக சிவகாசியில் இருந்து கோவை சென்ற அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி கௌதம் தலையில் ஏறிஇறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே கௌதம் உயிரிழந்தார்.அவருடன் சென்ற சரவணன்படுகாயமடைந்தார்.இதில் உயிருக்கு போராடியவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புது ஜெயில் ரோட்டில்5 பேர் கைது!
பொன்னகரம் முதல் தெரு முத்துப்பாண்டி மகன் ராஜபாண்டி (24), இவர் டிரைவர் வேலை பார்த்து வந்தார். இவருடைய தம்பி ஹரிஷ் பாண்டி. இவருடைய நண்பர் வெங்கடேஷ்.இவர் புதுஜெயில்ரோடு கோட்ஸ்பாலம் அடியில் சென்று கொண்டிருந்தார்.அங்கு வந்ஊ கும்பல் ஒன்று அவரை ஆபாசமாக பேசி சரமாரியாக தாக்கினர். இதை பார்த்த ராஜபாண்டி அவர்களை தடுத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் அவரை மரக்கட்டை பாட்டில் மற்றும் கல்லால் சரமாரியாக தாக்கினர். இதில் பலமாக அடிபட்டு டிரைவர் ராஜபாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து கரிமேடு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட ராஜபாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .
பின்னர் கொலைசெய்யப்பட்ட ராஜபாண்டியின் தம்பி ஹரிஸ்பாண்டி கொடுத்தபுகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த கொலை குறித்து சி.சி.டிவி.பதிவுகளை ஆய்வு செய்து கொலையிளிகள்குறித்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் அவரை கொலை செய்த ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.அவர்களில் பொன்னகரம் நான்காவது தெருவை சேர்ந்த பாண்டியராஜன் மகன் மனோஜ் சிவா என்ற மனோஜ் (22), பொன்னகரம் பிராட்வே நான்காவது தெரு செந்தில் மகன் சிரிமணிகண்டன் என்ற சிங்கம் (20), பெத்தானியாபுரம் சின்னசாமி பிள்ளை தெரு மயில்ராஜ் மகன் தங்கப்பாண்டி 19, கரிமேடு பொன்னகரம் மூன்றாவது தெரு முத்துக்குமார் மகன் லோகேஷ் என்ற கணேஷ் (20), சிம்மக்கல் பேச்சி அம்மன் படித்துறை பூந்தோட்டம் மெய்யப்பன் மகன் கண்ணன் (23) ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய கிருஷ்ணகுமார் என்ற கிட்டுவை தேடி வருகின்றனர்.பிடிபட்டவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
வண்டியூரில் மெஷின் ஆபரேட்டர் பலி!
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி தாலுகா முனைவேந்தரி கிராமத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி மகன் அழகு சுந்தரம் (37), இவர் வண்டியூர் சமையன் கோயில் பின்புறம் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு விபத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த அழகு சுந்தரத்தை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை இருந்தவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அழகு சுந்தரத்தின் மனைவி பவித்ரா அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பிளாஸ்டிக் கம்பெனியின் உரிமையாளர் அமல் தாஸ் மகன் நிர்மல்ராஜ் (30), மீது வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி