பாமக நிர்வாகி வீட்டில் நாட்டுவெடி குண்டு வீச்சு.
மதுரை: மதுரை மேல அனுப்பானடி ராஜம்மாள் நகர் மெயின் ரோட்டில் வசிப்பவர் மாரிச்செல்வம்.இவர் வழக்கறிஞராக உள்ளார் பாமக நிர்வாகியுமாவார்.
இவர் வீட்டில்நேற்று காலை 9 மணி அளவில் மர்ம நபர்கள் இரண்டு நாட்டுவெடி குண்டுகளை வீசி விட்டு ஓடிவிட்டனர் .இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.மாதிரிகள் சிலவற்றையும் எடுத்துச்சென்றனர்.இந்த சம்பவம் குறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்ற வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாண்டியர் முழக்கம் அழகேசன் அவருடைய சகோதரர் வக்கீல் மணிகண்டன், மாரி கார்த்திக்,பெரியண்ண குமார் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
பெண் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை.
மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் 3வது தெரு திருப்பதி நகரை சேர்ந்தவர் கருப்பையா மகள் பிரியா 22 .இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்தார்.
இவர் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார்.இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பிரியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை 4 பேர் கைது.
மதுரை: மதுரை நேதாஜி ரோட்டில் ஒரு கோவில் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 4 பேரை திடீர் நகர் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அண்ணா நகர் 9வது குறுக்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணகுமார் 53, வில்லாபுரம் மீனாட்சி நகர் 4வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் 52 ,செல்லூர் அய்யனார் கோவில் மெயின் ரோட்டை சேர்ந்த ஜோதிபாசு 50 ,வத்தலகுண்டுவை சேர்ந்த திருமலைக்குமாரநாயகம் 46 என்று தெரியவந்தது.
அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளையும் விற்பனை செய்த பணம் ரூபாய் 7300 ஐயும்போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.
மதுரை: மதுரை ஒத்தக்கடை சக்கரா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மனோஜ் குமார் 24 .பி .ஏ. பட்டதாரியான இவர் பெங்களூரில் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு உடம்பில் திடீரென்று கொப்பளங்கள் தோன்றியது. இதனால் சிகிச்சை பெறுவதற்காக மதுரைக்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார்.இதனால் மன உளைச்சலில் இருந்த மனோஜ்குமார் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் தொழிற்சாலை மெஷின் ஆபரேட்டர் பாம்பு கடித்து பலி.
மதுரை: மதுரை அருகே முஸ்டக்குறிச்சி நெடுங்குலத்தைச் சேர்ந்தவர் சிங்கராயர் 45. இவர் வெள்ளரி பட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்தார்.
இவர் வேலைக்கு இரவில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் அப்போது மேலூர் மதுரை ரோடு சந்திப்பில் ஓரமாக பைக்கை நிறுத்தினார் .அவர் நிறுத்திய இடத்தில் பாம்பு கிடந்தது. அந்த பாம்பு சிங்கராயர் காலில்கடித்துவிட்டது.
ஆபத்தான நிலையில் அவருக்கு மேலூர் மருத்துவமனையில் முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மனைவி தாயம்மாள் கொடுத்த புகாரின் பேரில் மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.