செல்லூர் 50 அடி ரோட்டில் 2 வாலிபர்கள் கைது.
மதுரை : செல்லூர் சத்தியமூர்த்தி நகர் 5வது தெருவை சேர்ந்தவர் அபூபக்கர் (45) இவர், செல்லூர் ஐம்பதடி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அவரை மூன்று வாலிபர்கள் வழிமறித்தனர். அவர்கள், கத்தியை காட்டி மிரட்டி அபூபக்கரிடமிருந்து ரூ 1500ஐ வழிப்பறி செய்துவிட்டனர். இந்த சம்பவம் குறித்து, அபூபக்கர் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரிடம் வழிப்பறி செய்த நபர் யார் என்று விசாரணை நடத்தி தேடி வந்தனர். இந்த நிலையில், அவர்களை அடையாளம் தெரிந்தது. அவர்களில், செல்லூர் நந்தவனம் ஈவேரா பெரியார் தெரு அய்யாவு மகன் கர்ணன், செல்லூர் மணவாளன் நகர் இரண்டாவது தெரு முருகன் மகன் மணிகண்டன் ,மூர்த்தி என்று தெரியவந்தது. அவர்களில், கர்ணணையும் மணிகண்டனையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மூர்த்தியை தேடி வருகின்றனர்.
கல்லூரியில் செல்போன்கள் திருட்டு 3 மாணவர்கள் கைது
தல்லாகுளம் பகுதியில் கல்லூரியில் தேர்வு மையத்தில் வெளியே செல்போன்கள் திருடிய மூன்று மாணவர்களை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், அம்பலத்தாடி போஸ்ட் மான்குடியை சேர்ந்தவர் சேதுராமன் மகன் சூரியபாண்டி (20) இவர், தல்லாகுளம் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வு எழுத சென்றார். அவருடையதும் தனது நண்பர்களும் வைத்திருக்கிற செல்போன்களை தனது பேக்கில் வைத்து கல்லூரி தேர்வு மையத்திற்கு வெளியே வைத்துவிட்டு தேர்வுக்கு சென்றனர். பின்னர், திரும்பி வந்து பார்த்தபோது பேக்கில் வைத்திருந்த ஒன்பது செல்போன்கள் திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து, அவர் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் திருடியது தெரியவந்தது. அவர்களில், அண்ணா நகரைச் சேர்ந்த கம்ப்யூட்டர் முதலாம் ஆண்டு மாணவன், கம்ப்யூட்டர் இரண்டாம் ஆண்டு படிக்கும் இரண்டு மாணவர்கள் மாணவர்கள் என, மூன்று பேர் திருடியது தெரிய வந்தது. அவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலூர் நான்கு வழிச்சாலையில் ஓருவர் பலி!
மேலூர் நான்குவழிச் சாலையில் கார் மோதி சாலையை கடந்துசென்றவர் பலியானார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கேகே நகர் இரண்டாவது மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுதாகர் (51), இவர் மதுரை மேலூர் நான்கு வழி சாலயில், உயர்நீதிமன்றம் பின்புறம் உள்ள சாலை வழியாக கார் ஓட்டிச் சென்றார். அப்போது, (65) வயது மதிக்கத்தக்க ஒருவர் சாலையை கடந்து சென்றார். அவர் திடீரென்று சாலையை கடந்ததால் கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முதியவருக்கு பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து, ஒத்தக்கடை விஏஓ ரேவதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து, இறந்தவர் யார் எந்த ஊரைச்சேர்ந்தவர் என்று விசாரித்து வருகின்றனர்.
பைக்காராவில் ஐந்து வாலிபர்கள் கைது
மதுரை , வைகை வடகரை M.G.R பாலம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக, செல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, அங்கு கஞ்சா விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது. அங்கு விற்பனை செய்த தத்தனேரி கண்மாய்கரை கணேசபுரம் பாண்டி மகன் சுபாஷ் என்ற படையப்பா (23), மதுரை பாக்கியநாதபுரம் ஜோசப் மகன் தினேஷ்குமார் (20), ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பால நாகம்மாள் கோவில் பின்புறம் கஞ்சா விற்பனை செய்வதாக போதைப்பொருள் தடுப்புபிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது, அங்கு விற்பனை செய்த தேனி மாவட்டம் வருசநாடு சிங்கராஜா புரத்தைச் சேர்ந்த கணேசன் மகன் ராஜசேகர் (28) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும், அதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்த காசிமாயன் மகன் முருகன் (23) என்ற வாலிபரின் கைது செய்து அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சாவையும் பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி