தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல் ஒருவர் கைது.
மதுரை: மதுரை செல்லூர் 50 அடி ரோட்டில் டீக்கடை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த குலமங்கலம் மைன் ரோடு பகுதியை சேர்ந்த சீனிவாசன் 46 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து என்பத்தி ஏழு புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜராகாமல் போக்சோகைதிகள் தலைமறைவு போலீஸ் விசாரணை.
மதுரை: மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான போக்சோ செய்திகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்ட நீதிமன்றம் சிறப்பு நீதிமன்ற தலைமை எழுத்தர் வீரலட்சுமி.இவர் அண்ணாநகர் போலீசில் புகார் செய்துள்ளார்.
நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய போக்சோ கைதிகளான சிறுவாலை டி.புதூர் கவுனபட்டியை சேர்ந்த அய்யாவு மகன் முருகேசன் மற்றும் திருமங்கலம் கரடிகல்லை சேர்ந்த ஜெயபாண்டி மகன் மாரிபாண்டி 25. இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் பிணை பெற்று ஆஜராகவேண்டிய நாளில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த புகார் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இரண்டு கைதிளையும் தேடி வருகின்றனர்.
பதுங்கி இருந்த வாலிபர் கைது அரிவாள் பறிமுதல்.
மதுரை: மதுரை அண்ணா நகர்சப் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன்.இவர் பாண்டிகோவில் ரிங் ரோடு அம்மாதிடல் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது அவரை பார்த்த வாலிபர் ஒருவர் ஓடிச் சென்று பதுங்கினார்.
அவரை விரட்டி பிடித்து சோதனை செய்தபோது அவர் அரிவாள்ஒன்றை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த அரிவாளை பறிமுதல் செய்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அண்ணா நகர் யாகப்பா நகர் அப்பாஸ் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சபரி என்ற சபரிராஜ் 31. என்பது தெரிய வந்தது அவரை கைது செய்தனர்.
பாம்பு கடித்து தோட்டத் தொழிலாளி பலி.
மதுரை: மதுரை அருகே வாடிப்பட்டி திருவளவயராயநல்லூரை சேர்ந்தவர் ராமசாமி மகன் மாரி39. இவர் அங்குள்ள ஒரு தோட்டம் ஒன்றில் வேலை பார்த்து வநதார்.
அப்போது தோட்டத்திற்குள் நடந்து சென்றபோது இவரை பாம்பு கடித்தது. இதில் வாயில் நுரை தள்ள மயங்கி கிடந்தவரை முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார் .இதுகுறித்து மனைவிநாகேஸ்வரி கொடுத்த புகாரில் சோழவந்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.