சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தை உடைத்து 1050 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பெட்டிகள் கொள்ளை:
மதுரை எஸ் எஸ் காலனியில் புகையிலை பெட்டிகளுடன் சீல் வைக்கப்பட்ட வீட்டின் ஜன்னலை உடைத்து 1080 கிலோகொண்ட பெட்டிகளை கொள்ளையடித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜ்குமார் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அந்த புகாரில்,
எஸ் எஸ் காலனி பாரதியார் 3வது தெருவில் உள்ள வீடு ஒன்றில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மாதிரிகளை எடுத்து ஆய்வு நடத்தப்பட்டு அதன் மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது .
அந்த வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.இந்த வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும்படி பெற்ற நீதிமன்ற உத்தரவு உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் அதிகாரிகளுடன் அந்த வீட்டுக்குச் சென்றபோது ,வீட்டின் பின்னால் ஜன்னல் உடைக்கப்பட்டு வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த ஆயிரத்து 80 கிலோ புகையிலை பெட்டிகள் மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து, உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜ்குமார் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்துச்சென்ற ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
திருநகரில் வீடு புகுந்து நகை பணம் திருட்டு:
மதுரை டிச 15 திரு நகர் திருவள்ளுவர் நகர் தனக்கன் குலத்தை சேர்ந்தவர் நாகம்மாள் 40. இவர் வீட்டை பூட்டிவிட்டு சாவியை மீட்டர் பெட்டியில் வைத்து விட்டு மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அந்த சாவியை எடுத்து மர்மநபர் வீட்டுக்குள் புகுந்து வீட்டில் வைத்திருந்த 10 கிராம் தங்க நகைகள் மற்றும் செல்போன் ஒன்றையும் திருடிச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து நாகம்மாள் திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.
விளக்குத்தூண் பகுதியில் அழகு சாதன பொருட்கள் விற்பனை அலுவலகத்தை உடைத்து
ரூபாய் 8 லட்சம் கொள்ளை :
மதுரை விளக்குத்தூண் பகுதியில் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அலுவலகத்தை உடைத்து ரூபாய் 8 லட்சம் கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை எழுகடல் அக்கிரகாரத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார் 43. இவர் கீழ ஆவணி மூல வீதியில் வங்கி ஒன்றின் மாடி கட்டிடத்தில் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அலுவலகம் நடத்தி வருகிறார்.இவர்இதன்மூலம் வசூலான பணம் ரூபாய் எட்டுலட்சத்தை வைத்து விட்டு வழக்கம் போல் கடையை மூடி விட்டு சென்றார்.அவர் மறுநாள் வந்து பார்த்தபோது அலுவலக கதவு உடைக்கப்பட்டிருந்தது . அலுவலகத்தில் வைத்திருந்த ரூபாய் எட்டு லட்சத்நை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து பிரவீன்குமார் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
பெருங்குடியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை:
மதுரை பெருங்குடி கணேஷபுரம சேர்ந்தவர் பிரசாந்த் மனைவி முத்துமாரி இருபத்தி21. இவர் சில தினங்களாக மன உளைச்சலாக இருந்து வந்திருக்கிறார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய அம்மா இசக்கியம்மாள் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துமாரியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.