மதுரை : மதுரை மே 14 ,கபடி விளையாட்டில் நடந்த தகராறில் ஏற்பட்ட, முன்விரோதத்தில் சிறுவனை அரிவாளால் வெட்டிய, மற்றொரு சிறுவனை காவல் துறையினர், கைது செய்தனர். அவனியாபுரம் செபஸ்தியாபுரம், பகுதியைச் சேர்ந்த (14), வயது சிறுவன் நண்பர்களுடன், கபடி விளையாடிக் கொண்டிருந்தார்.
இதில் ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் இவர் அப்பகுதியில் சென்ற சிறுவனை மற்றொரு சிறுவன், வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, கீரைத்துரை அரிவாளால் வெட்டிய சிறுவனைகாவல் துறையினர், கைது செய்தனர்.
——————————–
அவனியாபுரம் செம்பூரணி சாலையை, சேர்ந்த கண்ணன் (44), இவர் அதே பகுதியில் காட்டு மாரியம்மன், கோவில் சந்திப்பு அருகே சென்றார். அப்போது அவரை வழிமறித்த அவனியாபுரம் அருணகிரிநாதர், தெருவைச் சேர்ந்த ஆகாஷ், ரகுபதி (22), என்ற வாலிபர் கத்திமுனையில் மிரட்டி கண்ணன், வைத்திருந்த ரூபாய் 1100 வழிப்பறி செய்து விட்டார். இந்த வழிப்பறி குறித்து கண்ணன் , அவனியாபுரம் காவல் துறையில், புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து, அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ஆகாஷ், ரகுபதியை கைது செய்தனர்.
———————————-
திரு நகர் இரண்டாவது ஸ்டாப், பகுதியை சேர்ந்த சங்கர் (40), இவர் பைபாஸ் சாலை சொக்களிங்க நகர் பேருந்து நிலையத்தில், அருகே சென்ற போது, இவரிடம் வாளையும் கத்தியையும், காட்டி மிரட்டி அவரிடம் இருந்து, ரூபாய் 600 ஐ வாலிபர் ஒருவர் வழிப்பறி செய்து விட்டார். இந்த சம்பவம் குறித்து சங்கர் எஸ்.எஸ் காலனி காவல் துறையில், புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து, அந்த வாலிபரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பழங்காநத்தம், தண்டகாரன்பட்டியை சேர்ந்த, சுந்தர் (36), என்பவர் பசும், பொன்நகர் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரிடமும் வாள் ஒன்றையும், கத்தியையும் காட்டி அவர் வைத்திருந்த, ரூபாய் 1200ஐ வாலிபர் ஒருவர் , வழிப்பறி செய்து விட்டார். இந்த சம்பவம் குறித்து சுந்தர் சுப்பிரமணியம், காவல் துறையில், புகார் செய்தார்.
வழக்கு பதிவு செய்து, விசாரித்தபோது எஸ்.எஸ் காலனியிலும், பழங்காநத்தத்திலும், வழிப்பறியில் ஈடுபட்டது, ஒரே நபர் என்பது தெரியவந்தது. அவர் பொன்மேனி முதல் தெருவை சேர்ந்த, கருப்பையா என்ற வழுக்கை கருப்பையா என்பதும் உறுதியானது. அவரை காவல் துறையினர், கைது செய்தனர்.
———————————-
மதுரை மே 14, அவனியாபுரம் வல்லலானந்தபுரத்தை, சேர்ந்த மூதாட்டி ராமக்காள், இவர் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தற்கொலை செய்ய முடிவு செய்து, விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உயிருக்கு போராடிய ராமக்காளை, மதுரை அரசு மருத்துவமனையில் , சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவனியாபுரம் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
———————————–
மதுரை மே 14 , ஜெய்ஹிந்துபுரம் எம்.கே.புரத்தில், பணம் வைத்து சூதாடிய 15 , பேரை காவல் துறையினர், கைது செய்து அவர்களிடம் இருந்து 50 ஆயிரத்து 450 பறிமுதல் செய்தனர். ஜெய்ஹிந்துபுரம் காவல் ஆய்வாளர் திரு. மாதவன், இவர் அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எம்.கே.புரம் காஜாதெருவில், கும்பலொன்று பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தது.
அவர்களை சுற்றி வளைத்து பிடித்தார். அவர்களில் பாண்டியராஜன் (38), காளிதாஸ் (54), கண்ணன் (53) ,முத்துப்பாண்டியன்(47), முத்துராஜா (36), உள்பட (15), பேர் அடங்குவார்கள். அவர்களை கைது செய்து ,அவர்கள் பணம் வைத்து சூதாடிய சீட்டுகளையும், சூதாடிய பணம் ரூபாய் 50 ஆயிரத்து 450ஐயும் பறிமுதல் செய்தனர்.
————————————
மதுரை மே 14, கோசாகுளத்தில் திடீர் தீ விபத்தில், வீட்டுப் பொருள்கள் ரூபாய் 45 லட்சம் மதிப்பில் தீயில், கருகி நாசம் ஆயின. கோசாகுளம் சிவசாமி நகரை சேர்ந்த, முருகன் (54), சம்பவத்தன்று இவரது வீட்டில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வீட்டுப் பொருள்கள் ரூபாய் 45 லட்சம் மதிப்பிலான, பொருட்கள் எரிந்து நாசமாயின. இந்த விபத்து குறித்து கூடல்புதூர், காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து தீ பிடித்ததற்கான, காரணம் குறித்து விசாரணை, நடத்தி வருகின்றனர்.
————————————
மதுரை மே 14 , திருப்பரங்குன்றம் பகுதியில் ஜவுளிக்கடை, உள்பட பல்வேறு இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை காவல் துறையினர், கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா வேத நத்தத்தை, சேர்ந்த ராஜா (27), இவர் திருப்பரங்குன்றம் பெரிய கடை வீதியில், டீக்கடை முன்பாக நிறுத்தி வைத்திருந்த ரூபாய் 30 ஆயிரம் மதிப்புள்ள பைக், சம்பவத்தன்று திருடு போய்விட்டது. இதுகுறித்து அவர் திருப்பரங்குன்றம் காவல் துறையில், புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து, அந்த திருட்டு ஆசாமியை தேடி வந்தனர்.
———————————
மதிச்சியம் சப்பாணி கோவில் தெருவை, சேர்ந்த தவமணி, மனைவி பாண்டிச்செல்வி (28), இவரது வீடு புகுந்த மர்ம நபர் பீரோவில், வைத்திருந்த பன்னிரெண்டரை பவுன் தங்க நகையை மர்ம ஆசாமிதிருடிச் சென்று விட்டார். இந்த திருட்டு குறித்து பாண்டிச்செல்வி, மதிச்சியம் காவல் துறையில், புகார் செய்தார் . வழக்கு பதிவு செய்து திருட்டில், ஈடுபட்ட ஆசாமியை தேடி வந்தனர். இந்த நிலையில் வைகை வடகரை சேர்ந்த அய்யனார் (32), என்பவர் திருடியது உறுதிசெய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவரை கைது செய்தனர்.
————————————
மதுரை மே 14 , நாராயண புரத்தை சேர்ந்தவர் அழகுமலை (62), இவர் அந்த பகுதியில் உள்ள பேங்க் அருகே நடந்து சென்றார் . அப்போது அடையாளம் தெரியாத, வாகனம் மோதிஅவர் சம்பவ இடத்திலேயே, பலியானார். இந்த விபத்து குறித்து போக்குவரத்து காவல் துறையினர், புலனாய்வு பிரிவு வழக்கு பதிவு, செய்து அவர் மீது மோதிய வாகனத்தை தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி