அனுப்பானடியில் பயங்கர ஆயுதங்களுடன் வாலிபர் கைது பைக் பறிமுதல்
மதுரை அனுப்பானடியில் பயங்கர ஆயுதங்களுடன் வாலிபரை கைது செய்த போலீசார் அவர் வைத்திருந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
கீரைத்துறை சப் இன்ஸ்பெக்டர் கண்ணன்.இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அதிகாலையில் மேல அனுப்பானடி தீயணைப்பு நிலையம் பின்புறம் சென்றபோது பைக் ஒன்றுடன் சந்தேகப்படும்படியாக பதுங்கியிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தார். அந்த வாலிபர் தன்பைக்கில் வாள் ஒன்று, அரிவாள் 3 ,சானைக்கல் ஒன்று முதலியவற்றை மறைத்து வைத்திருந்தார். அவற்றை பறிமுதல் செய்து அந்த வாலிபரையும் கைது செய்தார் .அவர் எதற்காக பதுங்கியிருந்தார். கொலை செய்யத் திட்டமா, கொள்ளையடிக்க திட்டமா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காலில் ஆபரேஷன் ,வேலைக்கு செல்ல முடியாத நிலை மனமுடைந்த ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை
மதுரை காலில் ஆபரேஷன் செய்து வேலைக்கு செல்ல முடியாததால் மனமுடைந்த ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவனியாபுரம் வள்ளானந்தபுரம் 12வது தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின் 41. இவருக்கு வலது காலில் ஆபரேஷன் செய்து இருந்தனர் .இதனால் வேலைக்கு செல்ல முடியவில்லை. வருமானம் இன்றி தவித்து வந்தார். இதன்காரணமாக மனமுடைந்த ஸ்டாலின் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி பிரியா கொடுத்த புகாரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வரதட்சணை கொடுமை மருமகளுக்கு செக்ஸ் டார்ச்சர் மாமனார் உள்பட குடும்பத்தினரிடம் போலீஸ் விசாரணை .
மதுரை: வரதட்சணை கொடுமைசெய்து மருமகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த மாமனார் உள்பட குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மேற்கு மாம்பலம் அனுமார் கோவில் தெருவைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவருக்கும் மதுரை கோமதிபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. திருமணம் ஆன நாள் முதலே அந்த பெண்ணுக்கு கணவன் வீட்டார் தொடர்ந்து வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் மாமனார் அந்த பெண்ணை மிரட்டி செக்ஸ்டார்ச்சரும் செய்து வந்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து அந்த இளம்பெண் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.போலீசார் அந்த பெண்ணின் கணவர் மாமனார் மாமியார் மீது வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெய்ஹிந்துபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி, வாலிபர் கைது
மதுரை: ஜெய்ஹிந்த்புரத்தில் கத்தி முனையில் வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் முதல் தெரு கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் 43 .இவர் அங்கையற்கண்ணி நகர் 4வது தெருவில் சென்ற போது அவரை வழிமறித்த வாலிபர் அவரிடமிருந்து ரூபாய் முன்னூற்றுஎழுபதை பறித்துச்சென்று விட்டார்.இந்த சம்பவம் குறித்து அவர் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து ஜீவாநகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்த வேல்முருகன் மகன் கணேசன் என்ற மாட்டுமூளை கணேசன் 32 என்ற வாலிபரை கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி