மதுரையில் ரவுடியை போலீஸார் சுட்டு பிடித்தனர்.
மதுரை: மதுரை மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் உள்ள செண்பகத்தோட்டம் மீனவ சங்க கட்டிடம் அருகே ஒரு பெண்ணை நேற்று நள்ளிரவு ரவுடி குருவி விஜய் பலாத்காரம் செய்ய முயன்றபோது அந்தப்பெண் கூச்சலிட்டுள்ளார்.
உடனே அக்கம் பக்கத்தினர் 100-க்கு போன் செய்ததால் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.
போலீசாரை பார்த்ததும் குருவி விஜய் மற்றும் அவனது கூட்டாளிகள் போலீசாரை தாக்க முயன்றனர்.
உடனே போலீசார் குருவி விஜயை காலில் துப்பாக்கியால் சுட்டதில் அவனுக்கு காலில் காயம் ஏற்பட்டது.
அவனையும், அவனது கூட்டாளிகளையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
காலில் காயம் பட்ட குருவி விஜய் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்போது, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடையை உடைத்து 48,000 கொள்ளை.
மதுரை: மதுரை விராட்டிபத்தில் கடையை உடைத்து ரூபாய் 48,000 கொள்ளையடித்துச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர் .
அரசரடிமெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் விராட்டிபத்தில் கடைவைத்து வியாபாரம் நடத்தி வருகிறார். வழக்கம் போல் கடையை மூடி விட்டு சென்றவர் மறுநாள் வந்து திறக்க வந்தபோது கடையின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
கடையில் வியாபாரம் செய்து வைத்திருந்த பணம் ரூபாய் 48ஆயிரத்தையும் 2 செல்போன்களையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து ராஜேந்திரன் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.
மதுரை: மதுரை பைபாஸ்ரோடு ஹரிணிதெரு துரைச்சாமி நகரை சேர்ந்தவர் சுந்தரபாண்டி மகள் சுப்ரியா 26. இவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தனர்.
தற்போது திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்று சுப்ரியா கூறியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மனமுடைந்த சுப்ரியா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து எஸ் எஸ் காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி தூக்குப்போட்டு தற்கொலை.
மதுரை: பழங்காநத்தம் பசும்பொன் தெருவை சேர்ந்தவர் சக்தி மனைவி பாண்டிச்செல்வி 29.கணவர் சக்திக்கு குடிப்பழக்கம் இருந்தது.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு அடிக்கடி ஏற்பட்டது .இதன் காரணமாக மனமுடைந்த பாண்டிச் செல்வி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.
மதுரை: மதுரை தெற்கு வெளி வீதி சப்பாணி கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் மகன் விக்னேஸ்வரன் 37. இவருக்கு நிரந்தர வேலையில்லை இதனால் திருமணமும் ஆகவில்லை.
இதன் காரணமாக மனமுடைந்த விக்னேஸ்வரன் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தெற்கு வாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்விரோதத்தில் மருத்துவமனைக்குள் புகுந்து வாலிபர் மீது தாக்குதல் 3பேர் கைது.
மதுரை: முன்விரோதம் காரணமாக மருத்துவமனைக்குள் புகுந்து வாலிபரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.பழங்காநத்தம் தெற்குத் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் மகன் தினேஷ்குமார் 29. இவருக்கும் எஸ் எஸ் காலனி பாரதியார் 2-வது தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் நாகராஜ் 24 க்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மருத்துவமனையில் வரவேற்பறையில் இருந்த தினேஷ் குமாரை, நாகராஜன் அவரது சகோதரர் சிவபெருமான் மற்றும் நண்பர் பாலச்சந்திரன் ஆகிய மூவரும் புகுந்து இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தினேஷ் குமார் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜ் 24 ,சிவபெருமாள் 20, பாலச்சந்திர 19 மூவரையும் கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி
Related