போதையில் தூங்கிய கூலி தொழிலாளி தீப்பிடித்து பலி!
மதுரை : மதுரை கீழகுயில்குடி நடு ஒத்தவீட்டைச் சேர்ந்தவர் மாரியப்பன் (65), இவர் கூலி தொழிலாளி ஆவார். இவர் சமணர் மலை அருகே ஒயின்ஷாப்பில் மது அருந்திவிட்டு அளவுக்கு அதிகமான போதையில் அருகே மயங்கியநிலையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர்அணிந்திருந்த அணிந்திருந்த சட்டையில் எதிர்பாராத விதமாக தீ பிடித்தது. இதில் தீயில் கருகிய நிலையில் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவருடைய மகன் மாரிமுத்து நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாரியப்பன் உடலில் எப்படி தீப்பிடித்தது அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமண்டபத்தில் வாலிபர் மீது தாக்குதல் உறவினர் கைது!
தேனி மஞ்ச நாயக்கன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சின்னசாமி மகன் கருப்பையா (38), .இவரது உறவினர் நாமக்கல் ராசிபுரத்தைச் சேர்ந்த திருப்பதி மகன் ராஜபாண்டி. இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் சன்னதிதெரு திருமண மண்டபத்தில் நடந்த விசேஷத்திற்கு இருவரும் வந்திருந்தனர் .அப்போது அங்கு அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜபாண்டி, கருப்பையாவை சரமாரியாக தாக்கினார். இந்த தாக்குதல் குறித்து கருப்பையா திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய உறவினர் ராஜபாண்டியை கைது செய்தனர்.
பஸ் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் படுகாயம்!
சிவகங்கை மாவட்டம் ,திருப்புவனம் பறையன் குளத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டி மகன் அஜய் (23), இவர் மதுரை சென்ற தனியார் பஸ்ஸில்ல் பயணம் செய்தார். அவர் பின்புற படிக்கட்டில் நின்று பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று பஸ் வேகமாகச் சென்றதால் நிலைதடுமாறி பின்புற படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதனால் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .இந்த விபத்து குறித்து அவருடைய சகோதரர் விஜயன் கொடுத்த புகாரில் போக்குவரத்து புலனாய்வு போலீசார் பஸ் டிரைவர் திருபுவனம் நாடார் கிழக்கு தெருவை சேர்ந்த அருண்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி