பதுங்கியிருந்த கொள்ளை கும்பல் கைது சுற்றிவளைத்த போலீசார்.
மதுரை: மதுரை கூடல்புதூரில் கொள்ளையடிக்கும் திட்டத்துடன் பதுங்கியிருந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். கூடல்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஆறுமுகம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அவர் கூடல் நகர் அருகே பொதிகை நகரில் பதுங்கியிருந்த கும்பலை சுற்றி வளைத்த பிடித்தார்.அவர்களில் 3 பேர் பிடிபட்டனர் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர் .
பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் மீனாட்சிபுரம் சங்கர் லயன்ஐந்தாவது தெருவைச் சேர்ந்த ரவி 35 ,கே.வி.சாலைஇந்திரா நகர் 2-வது தெருவைச் சேர்ந்த விக்னேஷ்27,தத்தனேரி மெயின்ரோடு அருள்தாஸ்புத்தை சேர்ந்த மணிவண்ணன் 34 என்பது தெரியவந்தது.
மூவரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய மருது, குமாரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் கொள்ளையடிக்கும் திட்டத்துடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது.
பெண் தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன போலீஸ் விசாரணை
மதுரை: மதுரை கருப்பாயூரணி சீமான் நகர் 2வது தெரு பாரதி புரத்தை சேர்ந்தவர் நடு காட்டான் மனைவி சுசீலா 40 .இவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து கணவர் நடுகாட்டான் மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுசிலாவின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூச்சுத்திணறல் நோயால் அவதிப்பட்டவர் திடீர் சாவு.
மதுரை: மதுரை பீ.பீ.குளம் இந்திரா நகர் முதல் தெரு சேர்ந்தவர் முருகன் 45 .இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. கடந்த 3 நாட்களாக திடீரென்று அவருக்கு மூச்சுத்திணறல் வந்தது .
அதற்கான சிகிச்சையும் பெற்று வந்த நிலையில் திடீரென்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மனைவி லட்சுமி தல்லாகுளம்போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை காரணம் என்ன போலீஸ் விசாரணை.
மதுரை: மதுரை வில்லாபுரம் சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன்மகன் ஜெயகுமார் 24 .இவர்சில தினங்களாக மன உளைச்சலில் இருந்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்ததற்கொலை குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரின் தற்கொலைக்கான காரணம் என்ன என விசாரித்து வருகின்றனர்.
வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை போலீஸ் விசாரணை.
மதுரை: மதுரை காமராஜர் சாலை கொண்டித்தொழு தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் செல்வகுமார் 28.இவர் குருவிகர சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவரது தற்கொலை குறித்து தெப்பக்குளம்போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்விரோதத்தில் வாலிபரை வழிமறித்து தாக்குதல் 2 பேர் கைது.
மதுரை: மதுரை திருநகர் ஜோசப் நகர் வடக்கு ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் மூவேந்திரன்38. இவருக்கும் திருநகர் சுமதி சோலை நகர் சிவராமகிருஷ்ணன்36. இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்திருக்கிறது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் ஜிஎஸ்டி ரோடு ரயில்வே பாலம் அருகே சென்ற மூவேந்திரனை வழிமறித்து சிவராமகிருஷ்ணனும் ஹார்விபட்டியை சேர்ந்த செவ்வியல் நகரை சேர்ந்த செல்வம் என்ற செல்வேந்திரன் 31. இருவரும் பலமாக தாக்கியுள்ளனர்.
இந்ததாக்குதல் சம்பவம் குறித்து மூவேந்திரன் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிவராமகிருஷ்ணன், செல்வம் என்ற செல்வேந்திரன் இருவரையும் கைது செய்தனர்.
வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது.
மதுரை: மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் பாலு மகன் சேகர் என்ற ராஜசேகர் 31. இவர் மீது ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் இவரது குற்ற நடவடிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த்சின்கா உத்தரவின் பேரில் போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
தமிழ்நாடு நாடக நடிகர்கள் சங்க தலைவர் தேர்வு.
மதுரை நவ 12 தமிழ்நாடு நாடக நடிகர்கள் சங்கம் மதுரையில் உள்ளது. இதன் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட எம். எஸ் .பி .கலைமணி தேர்தலில் வெற்றிபெற்று தமிழ்நாடு நாடக நடிகர்கள் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவருக்கு நடிகர்சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும், பாஜக மருத்துவப்பிரிவு மாவட்ட செயலாளர் பரமேஸ்வரிதனக்குமாரும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.