பொன்மேனி பேருந்து நிலையம், அருகே டிரைவர் பலி!
மதுரை : மதுரை எஸ்.எஸ் காலனி ராம் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பாண்டி ஆனந்தம் (55), இவர் டிரைவர் ஆவார்.இவர் பைபாஸ் ரோடு பொன்மேனி பஸ் ஸ்டாப் பின்புறம் சென்றபோது திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டி ஆனந்தம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவருடைய மகன் ராஜேஷ் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து அவருடைய சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐந்து வயது சிறுமி பலாத்காரம், முதியவர் கைது!
முத்துப்பட்டி கண்மாயக்கரை பகுதியைச் சேர்ந்தவர் முதியவர் முருகேசன் (62), இவர் முதல் வகுப்பு படிக்கும் ஐந்து வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இது குறித்து அவர்கள் அனைத்து மகளிர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். காவல்துறையினர்,வழக்கு பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர் முருகேசனை கைது செய்தனர்.
வீடு புகுந்து, பெண் மீது தாக்குதல்!
முனியாண்டிபுரம் கார்த்திக் செல்வன் மனைவி அருணா (30), இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜீவன் மனைவி ரீட்டா செல்வியிடம் (31), பணம் வாங்கிய தொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் ரீட்டாசெல்வி,கணவர்ஜீவன், தனலட்சுமி,செலவம் உள்பட எட்டுபேர் அருணாவின் வீட்டிற்கு சென்று அவரை ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அவர் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். காவல்துறையினர் எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து ரீட்டா செல்வி, கணவர் ஜீவன் உறவினர் செல்வம் ஆகிய, மூவரையும் கைது செய்தனர்.
கோஷ்டி மோதல், 15 பேர் கைது!
சின்ன அனுப்பானடி அம்பேத்கர் நகரில் பைக்கை வேகமாக ஓட்டி சென்றது தொடர்பாக தட்டி கேட்டதால் இரண்டு கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர். இது தொடர்பாக அனுப்பானடி அம்பேத்கர் நகர் பாலமுருகன் மகன் நாகராஜ் கொடுத்த புகாரில் கீரைத்துரை காவல்துறையினர் , வழக்குப்பதிவு செய்து ஆனந்த பாண்டியன் (20), தினேஷ்குமார் (21), தினேஷ்குமார் என்ற மது ஜீவா (26), இவர்கள் தரப்பினர் (16), பேர் மீது வழக்கு பதிவு செய்து 11 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த மோதல் தொடர்பாக மற்றொரு தரப்பினர் ஆனந்தபாண்டியன் கொடுத்த புகாரில் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு பேரை கைது செய்தனர்.இந்த மோதலில் இருதரப்பிலும் மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி