சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை.
மதுரை: மதுரை கீரைத்துறையில் சிறுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கீரைத்துறை இருளப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலு மகள் முத்துலட்சுமி 16. இவர் வடகம் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
சில தினங்களாக மன அழுத்தத்தில் இவர் இருந்து வந்துள்ளார் .இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தந்தை பாலு கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி இரண்டு பேர் படுகாயம்.
மதுரை: மொட்டைமாடியில் விளையாடிய போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார் சிறுவர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வி.நங்கூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் ராஜா மகன் வசந்தகுமார் 21 .இவர் அனுப்பானடி தாய் நகர் கிருஷ்ணன் காலனிநான்காவது தெருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார் .
அப்போது வீட்டின் மொட்டை மாடியில் வசந்தகுமார் 21, சிறுவன் சுரேஷ்குமார் 16, மற்றொரு வர் சிவகுமார் 18 ஆகியோர் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி 3 பேரும் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் வசந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீரைத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கையில் வாலுடன் ரகளை வாலிபர் கைது.
மதுரை: மதுரை அவனியாபுரம் சுடுகாட்டுப் பாதையில் கையில் வாளுடன் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவனியாபுரம் இமானுவேல் நகர் பைபாஸ்ரோட்டை சேர்ந்தவர் ராஜாமணி மகன் வேலாயுதம் மூர்த்தி 29 .இவர் சுடுகாட்டு பாதையில் பெரியவாளை கையில் பிடித்தபடி பொதுமக்களை மிரட்டி ரகளை செய்து கொண்டிருந்தார்.இந்த தகவல் அறிந்த அவனியாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் அருண் சம்பவ இடத்திற்குச் சென்று வாலிபர் வேலாயுதமூர்த்தியை கைது செய்து அவரிடமிருந்த வாள் ஒன்றையும் பறிமுதல் செய்தார்.
பேஸ்புக் நண்பர்களிடம் தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்த மனைவியை கணவர் கண்டித்ததால் தலைமறைவு
போலீஸ் விசாரணை.
மதுரை: மதுரை எல்லிஸ் நகர் சேர்ந்தவர் சுந்தரபாண்டி மனைவி கலைவாணி 25. இவர் சோசியல் மீடியா ஃபேஸ்புக் நண்பர்களுடன் எந்த நேரமும் செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதை கணவர் கண்டித்துள்ளார் .இதனால் ஆத்திரமடைந்த மனைவி கலைவாணி மாயமாகிவிட்டா.ர் இந்த சம்பவம் குறித்து கணவர் சுந்தரபாண்டி எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கலைவாணியை தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி