கொரோனா ஊரடங்கை மீறி விற்பனை செய்த டீ மாஸ்டர் கைது.
மதுரை: மதுரை திருநகர் நெல்லையப்பபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் ரெங்கராஜ் 39.இவர் கொரோனா ஊரடங்கை மீறி பஸ்ஸ்டாப்பில் டீ விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட திருநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.கணேசன் அவரை எச்சரித்தும் கேட்கவில்லை.இதனால் அவரை கைது செய்தார்.
தொழிலில் நஷ்டம் தொழிலதிபர் தூக்குப்போட்டு தற்கொலை.
மதுரை ஜன10 தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு சொத்தை எல்லாம் அடமானம் வைத்தால் விரக்தி அடைந்த தொழில் அதிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எஸ். எஸ் .காலனி பைபாஸ் ரோடு பகுதியில் அப்பார்ட்மென்டில் வசித்து வந்தார் தொழிலதிபர் ரமேஷ்61. இவர் செய்து வந்த தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் சொத்துக்களை எல்லாம் அடமானம் வைத்து விட்டார்.இதனால் மனமுடைந்த தொழிலதிபர் ரமேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து எஸ் எஸ் காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவர் தூக்குப்போட்டு தற்கொலை மனைவி புகாரில் போலீஸ் விசாரணை.
மதுரை: மதுரை அவனியாபுரம் காமராஜர் நகர் கர்னியா தெருவை சேர்ந்தவர் சரவணகுமார் 39. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் குடித்துவிட்டு வந்ததால் மனைவியுடன் அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று இதுபோல குடித்துவிட்டு வந்ததால் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சரவணகுமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்ணீர் பிடிப்பதில் தகராறு மூதாட்டியை தாக்கிய மூதாட்டி கைது.
மதுரை: கீரைத்துரையில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் மூதாட்டியை தாக்கிய மற்றொரு மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
கீரைத்துரை மூக்க நாடார் சந்துவைசேர்ந்தவர் மூதாட்டி மூதாட்டி எஸ்தர்75 .அதே பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி தங்கம் 80. இவர்கள் இருவரும் பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் தங்கம் ஆத்திரம் அடைந்து எஸ்தரை தாக்கி விட்டார். இந்த சம்பவம் குறித்து எஸ்தர்கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டி தங்கத்தை கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி