பாலரெங்காபுரத்தில் சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை!
மதுரை : மதுரை தத்தனேரி மேல கைலாசபுரம் நாகராஜ் மகன் தரனீஸ்வரன் (17), இவனுக்கு அடிக்கடி உடல்நிலை கோளாறு ஏற்பட்டது. அதற்கான சிகிச்சை செய்வதற்காக அவர்கள் பல்வேறு கட்ட சோதனைகளை நடத்தி உள்ளனர். அந்த சோதனையில் சிறுவனுக்கு ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கான சிகிச்சையும் அளித்து வந்தனர். இதனால் அந்த சிறுவன் மனம் உடைந்து வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்த சம்பவம் குறித்து சிறுவன் தரனீஸ்வரனின் தந்தை நாகராஜ் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவன் தரனேஸ்வரனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
ரிங் ரோட்டில் 40 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது
கீரைத்துரை சப் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி இவர் சிந்தாமணி ரிங் ரோட்டில் மருத்துவமனை ஒன்றின் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாகச் சென்ற கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தார். அந்த காரில் ஆறு பேர் இருந்தனர். போலீசை கண்டதும் காரில் இருந்து இறங்கிய ஐந்து பேர் தப்பி ஓடிவிட்டனர். ஒருவரை மட்டும் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை தீவிரமாக சோதனை செய்தபோது காரில் 40 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அந்த 40 கிலோ கஞ்சாவுடன் அந்த காரையும் பறிமுதல் செய்தனர். காரில் பயணித்த எல்லிஸ் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பால்பாண்டி மகன் ராஜ்குமார் என்பவரை பிடித்தனர். பின்னர்அவரிடமிருந்து மூன்று செல்போன்களையும் பறிமுதல் செய்து விசாரித்தபோது தப்பி ஓடிய நபர்கள் அடையாளம் தெரிந்தது. இதைத்தொடர்ந்து ஜெய்ஹிந்த்புரம் சுகுமாரன், தூத்துக்குடி ராஜா, தூத்துக்குடி சுடலைமணி, தூத்துக்குடி மகேஸ்வரன், தூத்துக்குடி முத்துராஜா உட்படஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். தப்பி ஓடிய ஐந்து நபர்களையும் க்ரைத்துரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி