கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது:
மதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கண்ணன் தெருவை சேர்ந்தவர் பாலேந்திரன் 51.இவர் கருப்பாயூரணி பாரதிபுரம் 6-வது தெருவில் நடந்து சென்றார்.
அப்போது ,அவரை வழிமறித்த வாலிபர் கத்திமுனையில் மிரட்டி, பாலேந்திரனிடம் இருந்து ரூபாய் ஆயிரத்தை பறித்து சென்று விட்டார்.
இந்த சம்பவம் குறித்து, பாலேந்திரன் மாட்டுத்தாவணி போலீஸில் புகார் செய்தார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட, கருப்பாயூரணி யைச் சேர்ந்த பூமிநாதன் மகன் கரண் 25 என்பவரை கைது செய்தனர்.
சிறுமியை கடத்தி திருமணம் செய்து கற்பழித்த வாலிபருக்கு வலைவீச்சு:
மதுரை: சிறுமி என்று தெரிந்தும் கடத்தி திருமணம் செய்து பாலியியல் தொந்தரவு: வழக்குப் பதிவு செய்து வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்:
மதுரை களிமங்கலம், குன்னத்தூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் மகாலிங்கம் 25. இவர், கோயம்புத்தூர் சின்னியம் பாளையத்தை சேர்ந்த 17. வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து பின்னர் அந்த சிறுமியை பாலியியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை திருமணம் செய்து பாலியியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக வாலிபர் மகாலிங்கத்தை தேடிவருகின்றனர்.
மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி:
வேலை செய்தபோது நடந்த பரிதாபம்:
மதுரை: புதூரில், கட்டட வேலை செய்த போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
மதுரை அருகே அரும்பனூர் இரணியம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ராஜேந்திர பிரபு 28.இவர் கட்டிட தொழிலாளி ஆவார். மதுரை புதூர் கற்பகம் நகர் 6-வது தெருவில் புதிதாக கட்டப்பட்டு கொண்டிருக்கும் கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார் .
அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த விபத்து குறித்து, ராஜேந்திர பிரபுவின் அம்மா வேலாயி, புதூர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திடீர் தீ விபத்தில் ரூபாய் 25 லட்ச மதிப்பில்
வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சாம்பலானது:
மதுரை: மதுரை பார்க் டவுன் எக்ஸ்டென்ஷன் முத்தமிழ் நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் பிரதீப் 36 . இவருக்கு சொந்தமான வீடு, எஸ். ஆலங்குளம் எஸ் வி பி நகர் 2வது தெருவில் உள்ளது. இந்த வீட்டில் சம்பவத்தன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டு ரூபாய் 25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின .
இந்த விபத்து குறித்து, பிரதீப் கூடல்புதூர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து , தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடுபுகுந்து ரூபாய் 96 ஆயிரம் , செல்போன், ஏடிஎம் கார்டுகள் திருட்டு:
மதுரை: திருப்பரங்குன்றத்தில், வீடுபுகுந்து ரூபாய் 96 ஆயிரம் மற்றும் செல்போன், ஏடிஎம் கார்டுகளை திருடிச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சந்திர கணேஷ் மனைவி கணபதி ஆனந்தம் 38. சம்பவத்தன்று, இவரது வீடு புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூபாய் 96 ஆயிரத்து 100 செல்போன் ஒன்று,நான்கு,ஏடிஎம் கார்டுகள், ரேஷன் கார்டு முதலியவைகளை திருடிச் சென்று விட்டனர் .
இந்த சம்பவம் குறித்து ,கணபதி ஆனந்தம் திருப்பரங்குன்றம் போலீஸி ல்
புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
வீட்டை உடைத்து 19 பவுன் நகை கொள்ளை:
மதுரை வில்லாபுரத்தில், வீட்டை உடைத்து 19 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்:
மதுரைவில்லாபுரம் மீனாட்சி நகர் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் சண்முகம் 52. இவர், சம்பவத்தன்று இவரது வீடு புகுந்த வீட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 19 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து, சண்முகம் அவனியாபுரம் போலீஸில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
விஜிலென்ஸ் அதிகாரி என மிரட்டி முதியவரிடம் தங்கமோதிரம் பறிப்பு: 2 பேர் கைது :
மதுரை: மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே விஜிலென்ஸ் அதிகாரி என மிரட்டி, முதியவரிடம் மோதிரம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவலன் நகர் மணிமேகலை தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் 55 .இவர் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள விடுதி ஒன்றுக்கு சென்றார். அப்போது, அங்கு நின்றிருந்த இரண்டு பேர் வெங்கடேசனை மிரட்டி தாங்கள் விஜிலென்ஸ் அதிகாரி என்று கூறி அவர் அணிந்திருந்த அரைப் பவுன் தங்க மோதிரத்தை பறித்துச் சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து, வெங்கடேசன் திடீர் நகர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கோவை குனியமுத்தூர் வசந்தம் நகரைச் சேர்ந்த அஜிராசெரீப் 40, திண்டுக்கல் பச்ச மலையான் கோவில் தெருவைச் சேர்ந்த ரவிசங்கர் 45. ஆகிய இருவரையும் கைது செய்து மோதிரத்தை பறிமுதல் செய்தனர்.
பஸ்சுக்கு காத்திருந்த மூதாட்டியிடம் 18 பவுன் தங்க நகை திருட்டு:
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில், பஸ்சுக்காக காத்திருந்த மூதாட்டியிடம் 18 பவுன் தங்க நகைகளை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரைகே. புதூர் பரசுரம்பட்டி நாகலட்சுமி நகரை சேர்ந்தவர் இந்துராணி 62 .
இவர், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் கிழக்குப் பகுதியில் டவுன் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது, அவர் பையில் வைத்திருந்த 18 பவுன் தங்க நகைகளை, சக பயணி போல் நின்ற ஆசாமி திருடிச் சென்றுவிட்டார். பின்னர், இந்த திருட்டு தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து, இந்திராணி மாட்டுத்தாவணி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.
வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை:
மதுரை: மதுரை ஒத்தக்கடையில் வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை அடித்துச் சென்ற ஆசாமிகளை போலீஸார் தேடி வருகின்றனர். மதுரை
ஒத்தக்கடை சொர்ன மீனா நகரைச் சேர்ந்தவர் முருகன் மனைவி வாணிஸ்ரீ 39. இவர் குடும்பத்துடன், உறவினர் வீட்டுக்குச் சென்று இருந்தார்.
அப்போது, வீட்டின் கதவு உடைக்கப் பட்டிருந்த தகவலை அக்கம்பக்கத்தினர் அவர்களுக்கு தெரிவித்தனர் . பின்னர், அவர் வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப் பட்டிருந்தது .வீட்டில் பீரோவில் வைத்திருந்த ஆறே முக்கால் பவுன் நகை மற்றும் பணம் ரூபாய் 30 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து ,வாணிஸ்ரீ ஒத்தக்கடை போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
லோடு வேன் மோதி கொத்தனார் பலி:
மதுரை: மதுரை அருகே சக்கிமங்கலம் முனியாண்டி புரத்தை சேர்ந்தவர் பாலு 62 .இவர், கொத்தனார் வேலை பார்த்து வந்தார்.
இவர், சக்கிமங்கலத்தில் இருந்து ஆண்டார்கொட்டாரம் செல்லும் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாகச் சென்ற லோடுவேன் அவர் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே பாலு பலியானார்.
இந்த விபத்து குறித்து மகன் பிச்சைமணி கொடுத்த புகாரில், சிலைமான் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
[