இளம் பெண்ணை கடத்தி கற்பழித்த போலீஸ்காரர் சிறையில் அடைப்பு வேலியே பயிரை மேய்ந்தது.
மதுரை: மதுரை 30 இரவில் சினிமாவிற்கு சென்று திரும்பிய இளம் பெண்ணை கடத்தி கற்பழித்த போலீஸ்காரர் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர் வேலியே பயிரை மேய்ந்தது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அவனியாபுரம் வில்லாபுரம் ஜெயஜெய நகரை சேர்ந்த 45 வயதான அவர் அவனியாபுரம் பைபாஸ் ரோட்டில் கடை வைத்துள்ளார் இவரது கடையில் இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார் இந்த நிலையில் சம்பவத்தன்று இரவில் சினிமா பார்க்க தனது கடை ஊழியர்கள் அனைவரும் செல்லூரில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்றனர்.
அங்கு சினிமா முடிந்து நள்ளிரவு ஒரு மணிக்கு அந்த இளம்பெண்ணை வீட்டில் விடுவதற்காக தனது பைக்கில் உரிமையாளர் அந்த பெண்ணை அழைத்து வந்துள்ளார் அவர் நேதாஜி ரோடு பல்லாவரம் செல்வதற்காக சென்றபோது அங்கு ரோந்து பணியில் 2 போலீசார் அவர்களை வழிமறித்தனர்.
அப்போது ஒரு போலீஸ்காரர் கடை உரிமையாளரிடம் இந்த நேரத்தில் எங்கு சென்று வருகிறீர்கள் நீங்கள் இருவரும் யார் என்று விசாரித்துள்ளார் அப்போது அவர் தனது கடையில் வேலை பார்ப்பவரை சினிமாவுக்கு சென்று வருவதாக கூறி அதற்கான ஆதாரமாக டிக்கெட்டுகளை காட்டியுள்ளார் பின்னர் அந்த போலீஸ்காரர் கடை உரிமையாளரை தனியாக அழைத்துச் சென்று அந்தப் பெண் குறித்து முழு விவரங்களை கேட்டுள்ளார்.
அப்போது 22 வயதான அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் முடிந்து தற்போது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் அவரது பெற்றோருக்கு தெரிந்து தான் படம் பார்க்க சென்றதாக போலீஸ்காரரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் தன்னிடம் இருந்த மற்றொரு போலீஸ்காரரை வேறு இடத்திற்கு செல்லுமாறு கூறிவிட்டு அந்த போலீஸ்காரர் மட்டும் கடை உரிமையாளரை தொடர்ந்து மிரட்டுகிறார் பின்னர் அவரிடமிருந்து ரூபாய் 11,000 ரூபாய் ஏ.டி.எம் கார்டு டிரைவிங் லைசென்ஸ் செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அவரை அங்கிருந்து செல்லும்படி விரட்டி அடித்துள்ளார்.
ஆனால் கடைக்காரர் அந்த பெண்ணை அனுப்பிவைக்குமாறு கேட்டபோது நான் வீட்டில் சென்று பாதுகாப்பாக விட்டுவிடுகிறேன் என்று போலீஸ்காரர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீஸ்காரர்கள் மிரட்டலுக்கு பயந்து கடைக்காரர் அங்கிருந்து சென்றுவிட்டார் போலீஸ்காரர் அந்த பெண்ணிடம் மிரட்டி இருக்கிறார் இதனால் பயந்துபோன அந்த பெண் தன்னை விட்டுவிடும்படி போலீஸ்காரர் கெஞ்சியுள்ளரர் ஆனால் போலீஸ்காரர் மறுத்துவிட்டார் தொடர்ந்து அந்த இளம்பெண்ணை நேதாஜி ரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார் அங்கு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு யாரிடமும் கூறினால் மீண்டும் வழக்கு செய்து உள்ளே தள்ளி விடுவேன் என்று மிரட்டி விட்டு ஆட்டோவில் ஏற்றி அந்த பெண்ணின் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
இதற்கிடையே அந்த பெண்ணுக்காக அந்த பெண்ணின் வீட்டில் கடையின் உரிமையாளர் காத்திருந்தாள் ஆட்டோவில் வந்த அந்தப் பெண் இறங்கிய பின்னர் அவர் தன் வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து இருக்கிறார் அவருக்கு அவருடைய சேர்ந்த ஒருவருடன் இரண்டாவது திருமணம் நடத்த பெற்றோர் பேசி வருகிறார்கள் இந்த நிலையில் சம்பவத்தன்று சினிமாவுக்கு சென்று திரும்பியபோது போலீஸ்காரரா அந்தப் பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி உள்ளார்.
மேலும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து வீட்டில் தெரிவிக்காமல் அவள் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் அதன் பின்னரே அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று காப்பாற்றியுள்ளனர் அதன் பின்னர்தான் பெற்றோர்கள் இந்த பெண்ணிடம் விசாரித்தபோது அவர் போலீஸ்காரரை கடத்தி செல்லப்பட்டு நேதாஜி ரோட்டில் கற்பழிக்கப்பட்டது தெரியவந்தது.
பின்னர் இது குறித்து தெரிய நகர் போலீஸ் நிலையத்திற்கு வந்து கடையின் உரிமையாளர் தங்களுக்கு நேர்ந்த அந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து தெரிவித்தார் அப்போது அங்கிருந்து உதவி கமிஷனர் சம்பவம் குறித்து கேட்டறிந்து அந்த போலீஸ்காரர் யார் இந்த விசாரணை நடத்தினார்/
விசாரணையில் அவர் திலகர் திடல் போலீஸ் நிலையத்தில் குற்றப் பிரிவில் பணிபுரியும் முருகன் நாற்பத்தி ஒன்று என்பதும் அவருடன் இருந்த மற்றொருவர் ஊர்க்காவல் படையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது பின்னர் இந்த சம்பவம் நடந்த இடம் திருடன் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டது என்று கூறி அங்கு சென்று புகார் அளிக்குமாறு அவர்களுக்கு உதவி கூடியது குறித்து போலீஸ் கமிஷனர் பிரம்மாவிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது அவர் சம்பவம் குறித்து துணை கமிஷனரிடம் விசாரிக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும் சம்பவம் குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.தீபா வழக்கு பதிவு செய்து பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணைக்குப்பின் குற்றம் நடந்தது உறுதி செய்யப்பட்டு போலீஸ்காரர் முருகனை கைது செய்தனர் கைது செய்யப்பட்ட முருகன் மீது துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் வேலியே பயிரை மேய்ந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரும்பு பொருள்கள் திருட்டு 2 பேர் கைது.
மதுரை: மதுரை பாண்டி கோயில் அருகே பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு பாலத்தின் அடிப்பகுதியில் இரும்புப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை இரண்டு பேர் திருடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த ரமேஷ் என்பவர்கையும் களவுமாக பிடித்து மாட்டுத்தாவனி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகங்கை மாவட்டம் தாயமங்கலத்தை சேர்ந்த சக்கரபாணி 45, மதுரை கே புதூர் அழகர்நகரைச் சேர்ந்த பாண்டிச்செல்வம்37 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.அவர்கள் திருடிய பத்துக்கிலோ இரும்பையும் பறிமுதல் செய்தனர்.
கத்தி முனையில் வழிப்பறி சிறுவன் உட்பட4 பேர் கைது.
மதுரை: மதுரை விளாங்குடி சொக்கநாதபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் பூமிநாதன் 47 .இவர் விளாங்குடி நேதாஜி மெயின் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார் .அப்போது அவரை வழிமறித்த 4பேர் கத்தி முனையில் மிரட்டி பூமிநாதன் வைத்திருந்த ரூபாய் 500 வழிப்பறி செய்து ஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து பூமிநாதன் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் பணம் பறித்த 17 வயது சிறுவன், அவருடைய அண்ணன் கண்ணன் 26 , சதீஷ்குமார் 30 ,சகாயகுமார் 21 ஆகிய4 பேரையும் கைது செய்தனர்.
மதுரையில் குண்டர் சட்டத்தில் பிரபல ரவுடி கைது.
மதுரை: மதுரை செல்லூர் அருள்தாஸ்புரம் முனியாண்டி கோவில் 2-வது தெருவை சேர்ந்தவர் பாண்டி மகன் தங்கபாண்டி23. பிரபல ரவுடியான இவர் மீது கஞ்சா விற்பனை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் இவர் தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்ததால் இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு போலீஸ் கமிஷனர் திரு.பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.மாடசாமி ரவுடி தங்கபாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்தார்.