கத்தி முனையில் வழிப்பறி 6 பேர் கைது!
மதுரை : மேலமடை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (43), இவர் தாசில்தார் நகர் திலகர் தெருவில் சென்றபோது ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் 10 ஆயிரத்தை வழிப்பறி செய்துவிட்டனர் .ஜஇந்த சம்பவம் குறித்து சுரேஷ் அண்ணா நகர் போலீஸ் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் அடையாளம் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அண்ணா நகர் சரவணன் மகன் அரவிந்தகுமார் (28) ,யானை குழாய் கணேசன் மகன் முத்துக்குமார் என்ற சிப்பி (23), வாடிப்பட்டி பாலமேடுவை சேர்ந்த முருகன் மகன் அஜித் என்ற கருவாயன் (22), மேலமடை மருது பாண்டியர் தெரு ராமச்சந்திரன் மகன் வெங்கடேஸ்வரன் (27) ஆகியோரை கைது செய்தனர்.தப்பி ஓடிய ராஜாவை தேடி வருகின்றனர். கைது செய்தவர்களிடமிருந்து வாள் ஒன்று, அரிவாள் ஒன்று, கத்தி ஒன்று பணம் ரூ7500 ஐயும்பறிமுதல் செய்தனர்.
அவனியாபுரம் அருணகிரிநாதர் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி மகன் வேலு (28) இவர் பிரசன்னா காலனிரோடு பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அவரை வாலிபர் பைக்கில் வந்த வாலிபர் வழிமறித்துரூ 1600ஐ வழிப்பறி செய்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து வேலு அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவனியாபுரம் ஜேஜே நகரை சேர்ந்த நாகமணி மகன் மாரிமுத்து (22) என்பவரை கைது செய்தனர்.
கேரளா லாட்டரி விற்பனை முதியவர் கைது!
மதுரை புட்டு தோப்பு மெயின் ரோட்டில் கேரளா லாட்டரி விற்பனை செய்த முதியவர் ஒருவரை கரிமேடு போலீசார் பிடித்தனர். அவரிடம் இருந்து கேரளா லாட்டரி சீட்டு 88 சீட்டுகளை பறிமுதல் செய்து விற்பனை செய்த பணம் ரூபாய் 1770 ஐயும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் விசாரித்த போது ஆணையூர் எஸ் ஆலங்குளம் முருகன் (79), என்று தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.
ஒத்தக்கடையில், கால்வாயில் மூழ்கி முதியவர்பலி!
ஒத்தக்கடை நரசிங்கம் யானை மையம் நகரை சேர்ந்தவர் செல்லு பித்தன் (50), இவரை திடீரென்று காணவில்லை. இவரது மகன் மற்றும் உறவினர்கள் தேடிப் பார்த்தபோது நரசிங்கம் ஒயின்ஷாப் அருகே கால்வாயில் உயிரிழந்து பிணமாக கிடந்தார். இது குறித்து மகன் அய்யனார் ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி